Wednesday 24 September 2014

23.09.14 தர்ணா போராட்டசெய்தி தீக்கதிர் பத்திரிகையில்...

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்கள் தர்ணா


1984 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஆள்எடுப்பு தடுப்புச்சட்டத்தால் இந்தியா முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதற்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையை வழங்கவேண்டும். ரெகுலர் மஸ்தூர், குரூப் - டி ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய தேக்கத்தைக் களைந்திட வேண்டும். கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும். மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்கு இளநிலை பொறியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை தல்லாகுளம் லெவல் 4 வளாகத்தில் செவ்வாயன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.தர்ணாவிற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டுநடவடிக்கைக்குழு தலைவர் எஸ்.சிவகுருநாதன் தலைமைவகித்தார். கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.சூரியன் முன்னிலை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலத்துணைத்தலைவர் எஸ்.ஜான் போர்சியா துவக்கவுரையாற்றினார்.கோரிக்கைகளை விளக்கி பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் சி.செல்வின் சத்தியராஜ், என்.முருகன், எஸ்.முத்துக்குமார், ரெங்கராஜன், கே.சேது, டி.மகேஸ்வரி, .அழகுபாண்டியராஜா,  கே.முருகேசன், , டி.கே.சீனிவாசன், வா.நேரு ஆகியோர் பேசினர். என்எப்டிஇ மாநில அமைப்புச் செயலாளர் சி.விஜயரங்கன் நிறைவுரையாற்றினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டப்பொருளாளர் எஸ்.மாயாண்டி நன்றி கூறினார். 65 பெண்கள் உள்ளிட 250 க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் கலந்து கொண்டனர்.

No comments: