Tuesday, 23 September 2014

எழுச்சியுடன் நடைபெற்ற 23.09.14 மதுரை தர்ணா. . .

அருமைத் தோழர்களே! 30 அம்ச கோரிக்கை தீர்விற்காக மதுரையில் லெவல்-4 வளாகம் தல்லாகுளத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற 23.09.14 மதுரை தர்ணாவிற்கு JAC-ன்  தலைவர் தோழர்.S.சிவகுருநாதன் தலைமைதாங்கினார். JAC-ன் கன்வீனர் தோழர்.S.சூரியன் முன்னிலை வகுத்தார் . தர்ணாவில் 65 பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தர்ணாவை BSNLEU மாநில துணைத்தலைவர் தோழர்.S.ஜான் போர்ஜியா துவக்கிவைத்து உரையாற்றினார்...
அதன்பின் கோரிக்கைகளை விளக்கி ---தோழர்கள், N.முருகன்,D/S-TEPU, S.முத்துகுமார், D/S-FNTO, P.ரெங்கராஜன்,D.P-SNATTA, C. செல்வின் சத்தியராஜ், COS-BSNLEU, K.சேது,NFTE , D.மகேஸ்வரி, AGS-TEPU, P.அழகு பாண்டியராஜா,C/S-SNATTA, K..முருகேசன்,D.P-NFTE,-T.K.சீனிவாசன்,DVP-BSNLEU, வா.நேரு,-TEPU ஆகியோர் உரையாற்றினர்.
தோழர்கள், G.R.தர்மராஜன்.D/S-AIBPDA, M.சந்திரசேகர், D/S-SNEA, N.சோணைமுத்து , D/S-TNTCWU, அருணாசலம்,ACS-AIBSNLEA, V.K.பரமசிவம்,AIBSNLEA-CHQ-அட்வைசர்.  ஆகியோர் நமது 30 அம்ச கோரிக்கைகள்   வெற்றிபெற தோழமை பூர்வ வாழ்த்துக்களை தெரிவித்து உரையாற்றினர். தோழர்.சி.விஜயரெங்கன் COS-NFTE நிறைவுரை நிகழ்த்தினார். இறுதியாக S.மாயாண்டி,D.Tr.BSNLEU நன்றி கூற இனிதே நிறைவுற்றது.
மதுரை மாவட்ட ஊழியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு (JAC) அடுத்த கட்ட போராட்டமான 30.09.2014 காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெற உள்ள 2 மணி நேர வெளிநடப்பு போராட்டத்தை மிகவும் சக்தியாக நடத்திட திட்ட மிட்டது.போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தஅனைவருக்கும், வாழ்த்துரை வழங்கிய தோழமை சங்க நிர்வாகிகளுக்கும் நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் சார்பாகவும், JAC சார்பாகவும் நன்றியை உரித்தாக்குகின்றோம்.



No comments: