Thursday, 25 September 2014

இப்படியும் ஒரு மாநில முதல்வர் !

திரிபுரா மாநில முதல்வர் தமிழகத்திலுள்ள சேலம்  நகருக்கு 23.09.2014 அன்று வருகை தந்தார். இது குறித்து ஆங்கிலத்தில் HINDU   நாளிதழ்  வெளியிட்டுள்ள செய்தி வருமாறு..
A RARE BREED OF POLITICIANS- Chief Minister of Tripura Manik Sarkar in Salem on Monday.—
In the political atmosphere when the visit of even ordinary politicians create flutter, the one day visit of Tripura Chief Minister Manik Sarkar to Salem city on Monday was a low-key affair, much to the pleasant surprise of all sections of society.
Except a few wall posters and banners displayed by the All India Democratic Women’s Association, for whose conference Mr. Manik Sarkar had come to attend, there was no sign of the visit of a Chief Minister to the city.
There were no traffic diversions, no traffic hold ups and no convoy of vehicles, which are the signs of a visit of a VIP, at any point of time in the city.A handful of AIDWA representatives and the local leaders of the Communist Party of India (Marxist) who received him at the Salem Junction when he arrived on Monday evening by the West Coast Express, found him travelling all alone with just police escort. No partymen or his personal staff accompanied him.After a simple reception when he was presented with a single shawl, Mr. Sarkar, who is the Chief Minister for the fourth time, left for the circuit house, where he met the party cadre. Soon he was at the stage, arriving all alone with just a police escort vehicle. There was no commotion of any sort at the venue and only the slogan of red salute welcomed him.Even after completing his speech, he rushed towards his vehicle without waiting for any AIDWA leaders get down from the dais to see him off.After a simple dinner at the circuit house, he left for the railway junction to board the Yercaud Express to Chennai, again all alone.He saw to it that none of the party leaders and cadre accompanied him to the junction to see him off.Loud applause and lusty cheers rent the air when he was introduced as the ‘the cleanest and poorest’ Chief Minister in the county and like other party members, Mr. Sarkar donates his full salary and subsidiary allowances to the party fund and instead the party pays him Rs. 5,000 a month as subsistence allowance.
In a season of scams, Mr. Sarkar belongs to a rare breed of politicians who maintain a high degree of integrity, honesty and commitment, says a senior AIDWA leader.
இந்திய நாட்டின்  ஒரு மாநில முதல்வர் சென்னையிலிருந்து வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸில் சேலம் வருகிறார். அவருடன் ஒரே ஒரு  காவல் துறை ஊழியர் உடன் வருகிறார். எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் சேலம் சந்திப்பில் இறங்குகிறார். அவரை வரவேற்க விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கட்சித் தொண்டர்கள். அவர் காவல் துறை ஊழியருடன் மட்டும் சேலம் அரசு விருந்தினர் மாளிகைக்குச் செல்கிறார். அவர் சென்ற காருக்கு முன்னாலும் கார்கள் இல்லை.  பின்னாலும் கார்கள் இல்லை. அதன்பின் அவர் தான் சார்ந்துள்ள கட்சியின் ஒரு அமைப்பான(AIDWA) மாதர் சம்மேளன மாநாட்டில் பங்கேற்கிறார். உரையாற்றுகிறார். அதன்பிறகு மீண்டும் விருந்தினர் மாளிகைக்குச் செல்கிறார். மிக எளிமையான இரவு உணவை முடித்துக் கொண்டு அந்த காவல் துறை ஊழியர் ஒருவர் மட்டும் உடன்வர சேலம் சந்திப்புக்குச் செல்கிறார். ஏற்காடு எக்ஸ்பிரஸில் சென்னைக்குப் புறப்படுகிறார். வழியனுப்ப யாரும் உடன் வரக் கூடாது என்று கண்டிப்புடன் அவர் கூறியதால் கட்சித் தொண்டர்கள் யாரும் வரவில்லை.. போக்குவரத்துக்கோ, மக்களுக்கோ எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் ஒரு மாநில முதல்வர் வருகிறார். செல்கிறார். இப்படியும் ஒரு நிகழ்வா? இது கனவல்ல. நடந்த ஒரு நிகழ்வு.  
அவர் திரிபுரா மாநிலத்தின் முதல்வர் தோழர் மானிக் சர்க்கார். ஒரு எளிமையான முதல்வர் மட்டுமல்ல. நமது நாட்டின் ஏழை மக்களில் ஒருவராக வாழ்பவர். தான் பெறும் மாதச் சம்பளத்தை தனது கட்சியான இந்திய கம்யூணிஸ்ட் (மார்க்சஸிஸ்ட்) கட்சிக்கு நிதியாகக் கொடுத்துவிட்டு கட்சி தரும் ரூபாய் ஐயாயிரத்தை வைத்து வாழ்கிறார்.இந்த வாழ்வு வெறும் நிகழ்வல்ல. ஒரு பாடம்.

No comments: