Thursday, 25 September 2014

மங்கள்யானின் வெற்றி மானுடத்தின் வெற்றி. . .

மங்கள்யானின் வெற்றி மானுடத்தின் வெற்றி!மானுடத்தின் மாட்சி மிக்க வரலாற்றில்
மங்கள்யானின் வெற்றிமகத்துவம் வாய்ந்தது.மங்கள்யான் என்ற விண்கலம் 24.09.14 காலை 
எட்டு மணி அளவில் செவ்வாய்க்கோளின்சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப் பட்டது.
மங்கள்யான் என்பது கோள்சுற்றி (orbiter) வகையைச்சேர்ந்த விண்கலம் ஆகும்.இது செவ்வாய்க் 
கோளைச்சுற்றி வந்து ஆய்வு செய்யும்படம் எடுத்து அனுப்பும்.இந்த வெற்றிக்கு மூல காரணமாய்
 இருந்த பலரில்குறிப்பிடத்தக்கவர்கள் இரண்டு தமிழர்கள்.ஒருவர்மங்கள்யான் திட்ட இயக்குனரான
திரு சுப்பையா அருணன் (project director) அவர்கள்.இன்னொருவர்மங்கள்யானின் பயண நிகழ்ச்சி நிரல்
இயக்குனரான திரு மயில்சாமி அண்ணாத்துரை(programme director)  அவர்கள். யாரினும் கூடுதலாக இவ்விருவரும் பாராட்டுக்குஉரியவர்கள்பத்ம விபூஷண் முதல்
 பாரதரத்னா வரை இவ்விருவருக்கும் வழங்கி இந்தியா பெருமைப் படட்டும்
சாதித்து காட்டிய இந்திய விஞ்ஞானிகள்....
1. எஸ்.ராதாகிருஷ்ணன்
2. மயில்சாமி அண்ணாதுரை
3. எஸ்.ராமகிருஷ்ணன்
4. சிவகுமார்
5. உன்னி  கிருஷ்ணன்
6. சந்தராதன்
7. .எஸ்.கிரண்குமார்
8. எம்.ஒய்.எஸ்.பிரசாத்
9.எஸ்.அருணன்

No comments: