செல்போன் கார்ப்பரேட்டுகளுக்கு பொதுத்துறையின் வளங்களை தாரைவார்ப்பதற்காக பிஎஸ் என்எல் மற்றும் எம்டிஎன்எல் உள்ளிட்ட 10
பொதுத் துறை நிறுவனங்களை மூடிட முடிவு செய்தால் மோடி அரசு பெரும் போராட்டத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்று பிஎஸ்என்எல் ஊழியர் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக பிஎஸ்என்எல் தொழிற்சங்க சம்மேளனத்தின் சார்பாக அதன் அமைப்பாளர் வி.ஏ.என் நம்பூதிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:சில தேசிய நாளிதழ்களில் மத் திய அமைச்சரவையின் செயலர் தலைமையில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் உள்ளிட்ட 10 பொதுத் துறை நிறுவனங்களை அவை அதிக நட்டத்தில் இயங்குவதால் மூடுவது குறித்து விவாதிக்க அனைத்து உயர் அதிகாரிகளின் கூட்டமொன்று தில்லியில் செவ்வாயன்று நடைபெறுகிறது என்பதை அறிந்தோம். பிஎஸ்என்எல் தொழிற்சங்கங் களின் சம்மேளனம், பொதுத்துறை நிறுவனங்களை மூடுவது குறித்துகடும் அதிர்ச்சி யையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.ஒரு நுற்றாண்டுக்கு மேலாக தொலைத் தொடர்பு சேவைகள், தொலைத் தொடர்பு மற்றும் தந்தி துறையின் மூலமாக அளிக்கப் பட்டது; பின்னர் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் துறைக்கு அந்த சேவை மாற்றப்பட்டது. இந்த தொலைத் தொடர்பு சேவைகள் இத்தகைய பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக மலிவான கட்டணத்தில் கிடைத்து வந்தன. இந்நிறுவனங்கள் மூடப்பட்டால் சந்தேகம் இன்றிஇவற்றின் கட்டணங்கள் கடுமையாக உயர்த்த ப்படும். ரயில்வே துறைக்கு அடுத்து பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களே நாடு முழுவதும் அதிகமான நிலச் சொத்துக்களை வைத்துள்ளன. எந்த தனியார் கம்பெனியிடமும் இந்நிறுவனங் களிடம் உள்ளது போன்று கேபிள்கள், கோபுரங்கள். கட்டிடங்கள் போன்ற சொத்துக்கள் மற்றும் கட்டுமானங்கள் இல்லை.தனியார் கம்பெனிகள் இந்த கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்ள அரசை நிர்ப்பந்தித்து வருகின்றன. தற்போதைய நடவடிக்கை கார்ப்ப ரேட்டுகளை திருப்திப்படுத்த எடுக்கப்படுவ தாகும். பிஎஸ்என்எல், 9
ஆண்டுகள் வரை ரூ.45 ஆயிரம் கோடி வரை லாபம் சம்பாதித்து கொடுத்தது. மொபைல் கருவிகளுக்காக டெண்டர் விட்டபோதுதான் நட்டம் தொடங்கியது.சேவைகளை மேம்படுத்தவும் நிதியை பலப்படுத்தவும் பல ஆலோசனைகளை ஊழியர் சம்மேளனம் வழங்கியது. ஆனால்அவை அரசினாலும் பிஎஸ்என்எல் நிர்வாகத்தினாலும் கண்டுகொள்ளப்பட வில்லை. கடந்த 2 ஆண்டுகளாக நட்டம் குறைந்து வந்தது. மேலும் மேம்படுவதற்காக நல்ல வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.இந்த சூழ்நிலையில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறு வனங்களை மூடி விட திட்டமிடுவது மொத்த சேவைகளையும் கார்ப் பரேட்டுகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தொலைத் தொடர்பு சேவைகளை அடகு வைப்பதாகும். பிஎஸ்என்எல் தொழிலாளர்கள்
2.5 லட்சம் பேர் பிஎஸ்என்எல் சேவைகளை மேம்படுத்துவதில் தீர்மானகர மாக பணியாற்றி வருகின்றனர். அதே போல, அவற்றை பாதுகாப்பதற்காக இறுதி வரை போராடு வோம்.எனவே பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங் களை மூடும் திட்டத்தை இந்நிறுவனங்களை புதுப்பிக்க அனைத்து ஆதரவை அளிக்குமாறும் அரசுக்கு கோரிக் கை விடுக்கிறோம்.இவ்வாறு நம்பூதிரி தனது அறிக் கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment