உச்சநீதி மன்றத்தின் நீதிபதியை ஆளுநராக நியமித்திருப்பது என்கிற பாஜகவின் நடவடிக்கை ஜனநாயகத்தின் ஆணி வேரை பாதிக்கும் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சாடினார். கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் சனியன்று காந்தியமக்கள் இயக்க தலைவர் தமிழருவிமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில்காந்திய மக்கள் இயக்கத்தின்சார்பில் கோவையிலும் திருப்பூரிலும் தனது கட்சி போட்டியிடுவதாகவும், தனது வேட்பாளர்களுக்காக கோவை, திருப்பூர் பகுதிகளில் 5 நாட்கள்பிரச்சாரம் மேற்கொள்ளஇருப்பதாகவும் தெரிவித்தார். இதைஅடிப்படையாக கொண்டு அடுத்துவரவுள்ளசட்டமன்ற மற்றும்உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட போவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் முன்னாள்உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவத்தை கேரளமாநிலஆளுநராக நியமித்து இருப்பதற்குமோடி அரசுக்கு கண்டனத்தைதெரிவித்தார். அவர்வி.கே.சிங் என்பவரை அமைச்சராக ஆக்குவதும் உச்சநீதிமன்றதலைமை நீதிபதியை ஆளுநராக நியமிப்பது என்பதுஜனநாயக அமைப்பின் ஆணிவேரை பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். உயர் அதிகாரிகள் ஓய்வுபெறும் போது அவர்களுக்கு வேறு பதவிகள் வழங்கக் கூடாது எனவும் அப்படி பதவிகள் கிடைக்கும் பட்சத்தில் நடுநிலையுடன் செயல்பட முடியாதுஎனவும் அவர்தெரிவித்தார். மேலும் பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியசாமி தமிழர் நலனுக்கும், மீனவர் நலனுக்கும், ஈழதமிழர் நலனுக்கும் எதிராக தொடர்ந்து பேசி வருவதாகவும் இதை பா.ஜ.கதலைமை கண்டிக்காமல் அமைதியாக இருந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் செய்த அதேதவறுகளை பாஜக அரசுசெய்கிறதோ என்றஅச்சம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார். சுப்பிரமணியசாமியின் கருத்துகுறித்து பாஜக அகிலஇந்திய தலைமை மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டும் எனவும் தமிழருவி மணியன் வலியுறுத்தினார். பேட்டியின் போது காந்திய மக்கள் இயக்கத்தின்நிர்வாகிகள் உடன் இருந்தனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில்பா.ஜ.க. கூட்டணியை உருவாக்கி அதன்வெற்றிக்காக பாடுபட்டவர் தமிழருவி மணியன் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment