கொல்கத்தா: சாரதா சிட் பண்ட் ஊழலில் மம்தாதான் பயனடைந்தார் என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. குற்றஞ்சாட்டி உள்ளார்.மேற்குவங்க மாநிலத்தில் சாரதா சிட்பண்ட் நிறுவனம் மிகவும் பிரபலமானது. அந்நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது. இதுதொடர்பாக, அந்நிறுவனத்தின் ஊடகப்பிரிவு முன்னாள் தலைமை செயல் அதிகாரியும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான குணால் கோஷ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ. அமைப்பு விசாரித்து வருகிறது.இந்நிலையில், சி.பி.ஐ. நேற்று அவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது சி.பி.ஐ. அலுவலகத்திற்கு முன் குணால் கோஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''சாரதா மீடியாவில் இருந்து யரேனும் ஆதாயம் பெற்றார் என்றால் அது மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியாக மட்டுமே இருக்க முடியும்" என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.முன்னதாக விசாரணைக்கு முன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, நீதிபதியிடம் கோஷ் இதே கோரிக்கையை வலியுறுத்தினார். மேலும், தன்னை விசாரிக்கும்போது சாரதா நிதி நிறுவனத்தின் நிறுவனரான சுதிப்தா சென் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜியை வைத்துக்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.
|
No comments:
Post a Comment