மதச்சார்பின்மை பதாகையை உயர்த்திப் பிடித்த தலைவர் சுர்ஜித்-எம்.ஏ.பேபி பெருமிதம்,மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு நாடு முழுவதும் மதரீதியாக மக்களைப்பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை ஆர்எஸ்எஸ் அமைப்பும், அதன் இதர மதவெறிஅமைப்புகளும் தீவிரப்படுத்தியுள்ளன; இதை எதிர்த்து தேச பக்தியும், துணிச்சலும் மிக்க பஞ்சாப் மக்கள் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்த வேண்டுமென்றும், இடதுசாரி களின்பால் அணிதிரள வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்தலைமைக் குழு உறுப்பினர்எம்.ஏ.பேபி அழைப்பு விடுத்தார்.ஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் பொதுச் செயலாளராக நீண்டகாலம் பணியாற்றிய மாபெரும் தலைவருமான தோழர் ஹர்கிசன் சிங் சுர்ஜித்தின் 6ம் ஆண்டு நினைவுநாளையொட்டி ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பந்தலாவில் கட்சியின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய எம்.ஏ.பேபி,இந்தியாவில் மதச்சார்பின்மை எனும் பதாகையை உயர்த்திப் பிடித்ததில் சுர்ஜித்தைப் போன்று தலைசிறந்த பங்காற்றிய தலைவர் எவரும் இல்லை என்று குறிப்பிட்டார். பஞ்சாப்பில் 1980களில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கவும், இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப் பாட்டையும் அச்சுறுத்தவும் முயன்ற ஏகாதிபத்திய ஆதரவு பெற்றகாலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக மதச்சார் பின்மைக் குரலை உயர்த்தி, தீரத்துடன் போராடிய தலைவர்சுர்ஜித் என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.இன்றைக்கு நாட்டில் மோடி அரசாங்கம் பொறுப்புக்கு வந்துள்ள நிலையில், வலதுசாரி அரசியல் தீவிரமாக ஆதிக்கம் செலுத்தத் துவங்கியுள்ளது; மதவெறியும், ஏகாதிபத்தியமும் அதன்நவீன தாராளமயக் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று உதவிசெய்து உழைக்கும் மக்களின் நலன்களை அழிக்க முயல்கின்றன; இதற்கெதிராக ஒரு பரந்த இடதுசாரி அணியை கட்டமைப்பது அவசியக் கடமையாக மாறியுள்ளது என்றும் எம்.ஏ.பேபி கூறினார்.இந்நிகழ்வில் பேசிய கட்சியின் பஞ்சாப் மாநிலச் செயலாளர் சரண்சிங் விர்தி, தலைநகர் சண்டிகரில் ‘தோழர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் சமூக அறிவியல் ஆராய்ச்சி மையம்‘ அமைக்கப்படும் என்றும், அந்த மையம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் ஆய்வுகளையும், பயிற்சிகளையும் அளிக்கும் என்றும் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் பஞ்சாப் மாநில கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் ரத்தன்சிங் கௌரவிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment