Tuesday, 2 September 2014

கடன் ஏய்ப்பாளர் விஜய் மல்லையா: யுனைட்டெட் பேங்க்...

'பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, வேண்டு மென்றே, தான் வாங்கியகடனை செலுத்தாமல் பிடிவாதம் பிடிக்கிறார்' என, 'யுனை டெட் பாங்க் ஆப் இந்தியா' நிர்வாகம் குற்றம்சாட்டி உள்ளது. 'யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா'வின் நிர்வாக இயக்குனர் தீபக் நரங் கூறியதாவது: 'கிங் பிஷர்' விமானம் மற்றும் மதுபான நிறுவனத்தின் உரிமையாளர், விஜய் மல்லையாவும், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளும், வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை. வேண்டுமென்றே, கடனை திருப்பிச் செலுத்தாமல், அவர்கள் பிடிவாதம் பிடிக்கின்றனர். இதன் மூலம், எதிர்காலத்தில், இவர்களுக்கோ, இவர்கள் சார்ந்த நிறுவனங் களுக்கோ, வங்கி சார்பில், எந்த கடனும் கொடுக்கப்படமாட்டாது.தேவைப்பட்டால், சட்டப்படி, அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளவும்முடிவுசெய்துள்ளோம்.இவ்வாறு,அவர்கூறினார்.
கிங் பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் விஜய் மல்லையா, ரவி நெடுங்காடி, அனில் குமார் கங்குலி, சுபாஷ்குப்தே ஆகியோரை கடன் ஏய்ப்பாளர்களாக வங்கியின் ஜி.ஆர்.பி.அமைப்பு அறிவித்துள்ளது.இது குறித்து மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி, செபி ஆகியவற்றுக்கு தெரிவிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
கடன் வாங்கும் தகுதி இழப்பு:இதன் காரணமாக,கிங் பிஷர் நிறுவனம், அந்த வங்கியில் இனிமேல் கடன் வாங்கும் தகுதியை இழக்கிறது. மேலும், வரி ஏய்ப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள விஜய்மல்லையா,கங்குலி,சுபாஷ் குப்தே,நெடுங்கடி உள்ளிட்டோரும் கடன் வாங்கும் தகுதியை இழப்பதுடன், எந்தவொரு நிறுவனத்திலும் இயங்குநர் அளவிலான பதவிகளை வகிக்கும் தகுதியையும் இழக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக குற்ற வழக்குத்தொடரவும் வாய்ப்புள்ளதாக நரங் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றம் அனுமதி:முன்னதாக, மல்லையா உள்ளிட்டவர்களை கடன் ஏய்ப்பாளர்களாக அறிவிக்கலாம் என்று கோல்கட்டா உயர் நீதிமன்றம் கடந்த வாரம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, இந்த முடிவு நேற்று நடந்த ஜி.ஆர்.பி. கூட்டத்தில் எடுக்கப்பட்டது.இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் யாரும் கலந்துகொள்ளாததால், வக்கீல்கள் மூலம் மேற்கண்ட விவரம் அடங்கிய கடிதம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அனைத்துவங்கிகளும் நடவடிக்கை:இதனிடையே, பாரத ஸ்டேட் வங்கி, .டி.பி..,பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய வங்கிகளும் கிங் பிஷர் நிறுவனத்தையும், மல்லையா உள்ளிட்ட அதன் 4 இயக்குனர்களையும் கடன் ஏய்ப்பாளர்களாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது இங்கே குறிப்பிடத்தக்கதாகிறது.இவ் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் 4 பேரும் தொடர்ந்த பொது நல வழக்கு நிலுவையில் இருக்கிறது.

No comments: