Thursday 17 September 2015

BSNLஇணைய சேவை வேகம் 4 மடங்கு அதிகமாகிறது:

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, தனது இணைய சேவையை அக்டோபர் 1-ம் தேதி முதல் 4 மடங்கு அதிகமாக்கவுள்ளதுஇது தொடர்பாக BSNL தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
BSNL நிறுவனம் தற்போது நொடிக்கு 512kpbs வேகத்தில் இணையச் சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், பிரதமரின் டிஜிட்டல் இந்தியா சேவையின் அடிப்படையில் தற்போதைய இணையச் சேவையின் வேகத்தை 4 மடங்கு அதிகமாக்கப்படவுள்ளது. அதன்படி, BSNL இணையச் சேவை 2 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும்.
விநாயகர் சதுர்த்தி சலுகை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு BSNL நிறுவனம் புது வசந்தம் என்னும் சேவையை அறிமுகப்படுத்துகிறது.இந்த சேவையின்படி, BSNL ப்ரீ-பெய்டு லைஃப் டைம் சிம் கார்டினை ரூ.15 க்கு வாங்கிக் கொள்ளலாம். இந்த சிம் கார்டின் மூலம் 1000 நிமிடங்களுக்கு அழைப்புகளை இலவசமாக பேசிக் கொள்ளலாம். அதற்கான காலக்கெடு 3 மாதங்கள் ஆகும். மேலும், சிம் வாங்கிய முதல் 3 மாதத்துக்கு 0.8 பைசா மட்டுமே அழைப்புக்கான கட்டணமாக வசூலிக்கப்படும்.சிம் வாங்கியதும், மாதம் ஒன்றுக்கு 25 இலவச SMS என முதல் 3 மாதங்களுக்கு அனுப்பிக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி, 50 எம்பி இணையச் சேவையை முதல் மாதம் இலவசமாக வழங்கப் படும்.

No comments: