அன்பிற்கினியவர்களே ! 19.11.14 அன்று காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் , தல்லாகுளம் CSC/TRCயில், நமது மாவட்டத் தலைவர் தோழர்.சி .செல்வின் சத்தியராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட உதவிச் செயலர்,தோழர், எ.நெடுஞ்செழியன் வரவேற்புரைநிகழ்த்தினார் ஆய்படுபொருளின் மீது அறிக்கை வைத்து, மாவட்டச் செயலர் தோழர்.எஸ்.சூரியன் அறிமுக உரை ஆற்றினார். செயற் குழுவிற்கு வருகையில் ஒரு மாவட்டநிர்வாகி, ஒரு கிளைச் செயலர் தவிர அனைவரும் வந்திருந்தது மிகவும் நல்ல அம்சம். 10க்கும் மேற்பட்ட பெண்கள், முன்னணித் தோழர்கள் என, ஆக மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்டோர் செயற்குழுவில் கலந்து கொண்டது பாராட்டுக் குரியது. அறிக்கைமீதான விவாதத்தை G.M அலுவலக கிளைச் செயலர் தோழியர்.என்.ஈஸ்வரி துவக்கி வைக்க, அதன்பின் விவாதத்தில் மாவட்ட சங்க நிர்வாகிகளும், கிளைச் செயலர்களும் தங்களது சிறப்பான கருத்தை பதிவு செய்தார்கள்.
மாநில சங்க நிர்வாகிகள் எஸ்.ஜான்போர்ஜியா, பி.சந்திரசேகர், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் என்.சோனைமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநிலச் செயலர் தோழர்.எ.பாபு ராதாகிருஷ்ணன் சிறப்புரை நிகழ்தினார். மாநில செயலருக்கு BSNLEU மாவட்ட நிர்வாகி தோழர். எஸ்.பரிமள ரெங்கராஜ் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க நிர்வாகி தோழர்.ஆர்.சுப்புராஜ் ஆகியோர் பொன்னாடை போர்த்தினர். இறுதியாக எதிர்வரும் 27.11.14 ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தை 100% வெற்றியாக்கிட செயற்குழு உறுதி பூண்டது. பெப்ரவரி மாதத்தில் மதுரையில் மாநில அளவிலான மத நல்லிணக்க மாநாட்டை சக்தியாக நடத்துவது என்றும் முடிவெடுக்கப் பட்டது. கிளைச் சங்கங்கள் 30 அம்ச கோரிக்கையை ஊழியர்களிடம்விளக்கி களப்பணியாற்றி வேலை நிறுத்த போராட்டத்தை மதுரை மாவட்டத்தில் JAC அறை கூவலை சிரமேற் கொண்டு செயலாற்றிட செயற்குழு பணித்தது. இறுதியாக மாவட்ட பொருளர் தோழர்,எஸ்.மாயாண்டி நன்றிகூற செயற்குழு இனிதே நிறைவுற்றது.
கூடல் மாநகரில் கூடிய கூட்டம்...
19.11.14 மாலை 6 மணி முதல் மதுரை மாவட்ட JAC சார்பாக 27.11.14 நடைபெற உள்ள வேலை நிறுத்தத்திற்கான விளக்க கூட்டம் CSCவளாகத்தில் நடைபெட்ட்றது. கூட்டமைப்பின் தலைவர் தோழர்.எஸ்.சிவகுருநாதன் தலைமை தாங்கினார். 32 பெண்கள் உட்பட சுமார் 200 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்டமைப்பின் கன்வீனர் தோழர்.எஸ்.சூரியன் போராட்டத்தின் நோக்கத்தை கூறி வரவேற்புரை நிகழ்த்தினார். அதன்பின் கோரிக்கைகளை விளக்கி தமிழ் மாநில JAC சார்பாக தோழர்கள்....
தோழர். P. அழகுபாண்டிராஜா, C/S - SNATTA
தோழர். M. லட்சம், CVP - NFTE
தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன், C/S - BSNLEU
தோழர். A. செல்லப்பாண்டி,C/S - TEPU
ஆகியோர் மிகவும் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கி, கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை நிகழ்த்தினார்கள். இறுதியாக FNTO மாவட்ட பொருளர், தோழர்.கே.ஸ்டாலின் நன்றி கூற போராட்ட விளக்க கூட்டம் இனிதே நிறைவுற்றது.
தோழர்களே ! அனைத்து சங்கங்களின் ஒற்றுமையை உயர்த்தி பிடிப்போம்
அநீதிகளைய அணிதிரள்வோம்
அடையாள வேலைநிறுத்தம் 27.11.14நூறுசதம் பங்கேற்பில்
அடைந்திடுவோம் நமது 30 அம்ச கோரிக்கை வெற்றியை. . . .
போராட்ட வாழ்த்துக்களுடன், எஸ்.சூரியன் ---D/S-BSNLEU.
No comments:
Post a Comment