Tuesday 25 November 2014

சூளுரை ஏற்ற . . . பழனி . . .வேலைநிறுத்த ...விளக்கக்கூட்டம்.

அருமைத் தோழர்களே! ஒரு குறுகிய கால அழைப்பு என்றா லும் பழனித் தோழர்கள் ஏற்பாடு   செய்திருந்த 27.11.2014 ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத் திற்கான விளக்க கூட்டம் JAC  சார்பாக  24.11.2014  திங்கள் மாலை, பழனி, தொலைபேசியகத்தில்மிகவும் விறுவிறுப்பாக  நடைபெற்றது. 
கூட்டத்திற்கு FNTOசங்கத்தின் மாவட்டத தலைவர் தோழர் N.S. மகாலிங்கம் தலைமையில் 3 பெண்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.NFTE சங்கத்தின் தோழர்.எஸ். தனசங்கர் வந்திருந்தவர்களை வரவேற்றும், 27.11.14 ஒருநாள் வேலைநிறுத்தத்தை அனைவரும்   வெற்றிகர மாக்க வேண்டுகோளும் வைத்தார். BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் A.சிவபிர காசம், P.கணேசன், BSNLEU பழனி கிளைச் செயலர், தோழர்.K. பழனிக்குமார் ஆகியோர் பழனிப்பகுதி நிலைமைகள் குறித்தும். எதிர்வரு
ம் போராட்டத்தில் நமது பங்கு குறித்தும் விபரமாக பேசினார்கள். அதன்பின் மதுரை மாவட்ட JACயின் கண்வீனரும், BSNLEUசங்க மாவட்ட செயலருமான தோழர். S.சூரியன், நமது மத்திய கூட்டமைப்பு விடுத்துள்ள அறைகூவல் குறித்தும், மத்திய அரசு கடைபிடிக்கும் மக்கள் விரோத/ தேச விரோத/ ஊழியர் விரோத கொள்கைகள் குறித்தும், நமதுBSNL உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங் களை காவு கொடுக்க துடிக்கும் BJPஅரசிடமிருந்து மக்கள் சொத்தை பாதுகாக்கும் தேச பக்த போராட்டத்தில் நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்தார். பழனி பகுதியில் எதிர்வரும் 27.11.14 ஒருநாள் போராட்டத்தை 100 சதம் வெற்றிகரமாக்கிட கூட்டம் உறுதி பூண்டது.இறுதியாக TNTCWUசங்கத்தின் சார்பாக தோழியர்.S. ஜீவா நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

1 comment:

Palani Ganesan Dist Vice President said...

தோழர்!
பழனியில் நடைபெற்ற போராட்ட விளக்கக் கூட்டச் செய்தியை சுடச் ..சுட தந்திருக்கிறீர்கள் !
நன்றி !
நமது சங்க செய்திகளை இப்படி ' ஆவி பறக்க ' ...சூடாக ..உடனடியாக ..தாமதமின்றி ..அப்டேட் செய்வதில் நமது மதுரை பி.ஸ்.என்.எல் பிளாக் -கிற்கு (வலைப்பூவிற்கு) இணை வேறு யாரும் இல்லை !
தங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !!

:: தோழர் கணேசன் ..மாவட்ட துணைத்தலைவர்