40 வயதிற்குக் கீழே உள்ள நபர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு புகைபிடித்தலே காரணமாக இருக்கிறது. புகைபிடிப்பதால் நுரையீரலில் புற்றுநோய் வரும் என்பது தெரியும். ஆனால், புகைபிடிக்கும் பழக்கம் இதயத்தை பாதிக்கும் என்பது தெரிவதில்லை.மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலாஸ்டிரால் ஆகியவை இருந்தால் வரும். 50-55 வயது காலகட்டத்தில் பொதுவாக மாரடைப்பு வரும். 40 வயதிற்கு கீழே மாரடைப்பு வருவதற்கு புகைபிடித்தலே காரணமாக இருக்கிறது. பெண்களுக்கு நீரிழிவு நோய் காரணமாக மாரடைப்பு வருகிறது. எனவே, உயிர்கொல்லியான புகைபிடிப்பதைக் கைவிட வேண்டும்.
சிலர் 40 வயதில் புகைபிடித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் அவருக்கு எந்த நோயும் வரவில்லையே என்று கேட்பார்கள். புகைபிடிக்கும் பழக்கத்தால் 40-50 வயது நபர்கள் பலர் இறந்திருப்பார்கள். அவர்களது இறப்பு தெரியாமல் போய்விடுகிறது.புகைபிடிக்கும் நபர்களில் தப்பிப் பிழைத்தவர்களைப் பார்த்து தவறாக எடைபோடுகிறோம். புகைபிடிப்பது என்பது சட்டைப்பையில் வெடிகுண்டை வைத்து நடமாடுவது போல ஆகும். அது எப்போது வெடிக்கும் என்று கூற முடியாது. பேருந்தில் மாணவர்கள் தொங்கிக் கொண்டு செல்வார்கள். எனவே, அவர்கள் பேருந்தில் தொங்கிக் கொண்டு வருவதை ஏற்க முடியுமா?
புகைபிடிப்பவர்கள் தங்கள் குழந்தைகளை பேருந்தில் தொங்கிக் கொண்டு வருவதை அனுமதிப்பார்களா? புகைபடிப்பதை நிறுத்த வேண்டும் என்றால் படிப்படியாக நிறுத்த வேண்டும் என்பார்கள். இதில் உண்மை இல்லை. நிறுத்த வேண்டும் என்று முடிவு எடுத்தால் உடனடியாக நிறுத்துவது தான் இந்தப் பழக்கத்திலிருந்து மீளுவதற்கான வழியாகும்.

கல்லூரிப் பருவத்தில் புகைபிடிக்கும் பழக்கம் தொடங்கினால் 30-35 வயதில் அந்தப் பழக்கம் உயிர்கொல்லியாக மாறி விடுகிறது. மேலும் ஒருவர் புகைபிடிப்பதை நிறுத்தினாலும் அதன் தீங்கு உடலை விட்டு வெளியேற 4-5 ஆண்டு ஆகிறது.
நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்றவை வருவது நமக்குத் தெரிவதில்லை. புகைபிடிப்பது என்பது நம் கையில்தான் உள்ளது. எனவே, இதை இன்றே கைவிடுவது நல்லது.
No comments:
Post a Comment