Thursday, 9 July 2015

கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இந்தியா

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் சர்வதேச தொடரை இந்திய பெண்கள் அணி 3-2 என்ற கணக் கில் கைப்பற்றியது.நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பதிவு செய்திருந்தன.இந்நிலையில் தொடரை நிர்ணயிக்கும் 5வது மற்றும் கடைசிப் போட்டி புதன் கிழமை(ஜூலை8) பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, இந்திய வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 118 ரன்களில் சுருண்டது. கோஸ்வாமி, கெய்க்வாட், ஷர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
கேப்டன் மிதாலி
பின்னர் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை காமினி அதிரடியாக 62 ரன்களை குவித்தார். அவருக்கு துணையாக ஷர்மா 44 ரன்களை எடுத்தார். இவர்களின் அபார ஆட் டத்தால் இந்திய அணி 27.2 ஓவரிலேயே 121 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 3-2 எனக் கைப்பற்றியது. இதனையடுத்து, இம் மாதம் 11, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடக்கும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடுகின்றன. இதற்கும் மிதாலி ராஜ் அணித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.அணி விபரம்:– மிதாலிராஜ், ஜூலன் கோசுவாமி, ஹர்பிரீத்கபூர், கம்ரிதி, வேதா கிருஷ்ணமூர்த்தி, சுஷ்மிதா வர்மா, வனிதா, லித்திகாகுமாரி, ராஜேஸ்வரி, கெய்க்வாட், எக்தா பிஷட், சினேக் ரானா, பூனம் யாதவ், அனுஜாபாட்டீல், சுப்புலட்சுமி.

No comments: