Thursday, 13 March 2014

மத்திய சங்க செய்தி .... துளிகள் ...



நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதியம்
நேரடியாக பணி நியமனம் செய்த ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பாக ஆலோசிக்கED (நிதி) தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழு 13.03.2014 அன்று ஃபோரம் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசிக்க இருக்கிறது. ஃபோரம் சார்பில் இந்தப் பிரச்சனை தொடர்பாக விரிவான குறிப்பு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது.
NON EXECUTIVE  ஊழியர் சங்கங்களின்கூட்டு நடவடிக்கைக் குழு
11.03.2014 அன்று தோழர்.சந்தேஷ்வர்சிங், பொதுச் செயலர், NFTE தலைமையில் BSNLMS அலுவலகத்தில் NON EXECUTIVE சங்கங்களின் கூட்டம் நடைபெற்றது. தோழர். அபிமன்யு, பொதுச்செயலர், BSNLEU அனைவரையும் வரவேற்று NON EXECUTIVE ஊழியர்களின் பிரச்சனைகளையும் அவற்றின் தீர்வுக்கு ஒன்றுபட்ட போராட்டங்களின் அவசியத்தையும் விளக்கினார். அதற்காக ஒரு கூட்டு நடவடிக்கைக் குழு உருவாக்கப்பட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். அனைத்துச் சங்கங்களும் தோழர்.P.அபிமன்யுவின் முன்மொழிதலை வரவேற்றனர்.கூட்டு நடவடிக்கைக் குழு உருவாக்கப்பட்டு……
அதன் தலைவராகத் தோழர். சந்தேஷ்வர்சிங்,கன்வீனராக தோழர்.P. அபிமன்யு, இணை  கன்வீனர்கள் :1.தோழர் ஜெயப்ரகாஷ் , GS, FNTO ,  2.தோழர் பவன் மீனா, GS, SNATTA,பொருளாளர்: தோழர் R .C .பாண்டே  GS, BTEU அனைத்து  தொழிற்சங்கங்களின் செயலாளர்கள் கூட்டு நடவடிக்கை குழுவின்  உறுப்பினர்கள் ஆகதேர்ந்தெடுக்கப்பட்டனர்.விரிவான ஆலோசனைகளுக்குப் பின்னர், NON EXECUTIVE ஊழியர்களின் தீர்க்கப்படாத பிரச்சனைகளைத் தொகுத்து நிர்வாகத்திற்கு முதல் கட்டமாக ஒரு குறிப்பினை வழங்குவது என்றும்,26.03.2014 அன்று அனைத்துச் சங்கங்களின் பொதுச்செயலர்களும் பங்கு பெறும் ஒரு தர்ணாவை கார்ப்பொரேட் அலுவலகம் முன் நடத்துவது என்றும்,அடுத்த கட்ட நடவடிக்கைகளை பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் கலந்தாலோசிப்பது என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஓய்வூதியர்களுக்கு 78.2% பலன்
தோழர் நம்பூதிரி, AIBPA பொதுச்செயலர் தோழர் ஜெயராஜ், பொருளாளர் தோழர் சலாக்கி ஆகியோர் செலவினத்துறையின் இயக்குநர் திரு.விஜயகுமார்சிங் அவர்களை 10.03.2014 அன்று ஓய்வூதியர்களுக்கு 78.2% பலன் தொடர்பாகச் சந்தித்தனர்.துறையின் ஒப்புதலுக்காக குறிப்பு அனுப்பப்பட்டு நீண்ட காலம் ஆகியும் அதன் மீதான ஒப்புதலை வழங்குவதில் ஏற்பட்டுள்ள கடும் கால தாமதத்தைச் சுட்டிக் காட்டினர்.தனக்கு வந்த கோப்பில் சில குறிப்புகள் இருப்பதாகவும் உயர்மட்ட அதிகாரிகள் ஒப்புதல் வழங்குவதில் அந்த குறிப்புகள் தடையாக இருக்கும் என்பதால் அந்த குறிப்புகளை நீக்கி விட்டு மீண்டும் தனக்கு கோப்பினை அனுப்பும்படி கூறி இருப்பதாகவும் சாதகமான முடிவுகளை எட்ட முயற்சி செய்வதாகவும் கூறினார்.
2014 – 15 ஆண்டிற்கு GPF  வட்டி 8.7%
2014 -15ஆம் ஆண்டிற்கான GPF வட்டி விகிதம் 8.7% என்று 04.03.2014 அன்று அரசிதழ் ஆணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

No comments: