மதுரை Level -IV வளாகத்தில்
நன்றி அறிவிப்பு கூட்டம்
தோழர்களே!
நமது BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கூட்டமைப்பு 78.2% IDA இணைப்பில் பெற்றுள்ள வெற்றியை கொண்டாடும் முகத்தானும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதற்காகவும் மதுரை தல்லாகுளம் பகுதியில் 14.06.2013 அன்று காலை சிறப்புகூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தோழர் சந்திரசேகர் SNEA (DS) தலைமை தாங்கினார். சுமார் 35 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது பாராட்டுக்குரியது.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தோழர்கள் ஒப்பந்த விளக்கமும் நன்றியும் தெரிவித்து உரையாற்றினர்.
தோழர் வீ . சூரப்பன் CHQ-ORG.Secy. TEPU
தோழர் எஸ். கந்தசாமி DS SEWA
தோழர் ஆண்டியப்பன் ADS AIBSNLEA
தோழியர் பரிமளம் ACS NFTE
தோழர் சி. செல்வின் சத்யராஜ் COS BSNLEU
தோழர் G.P. பாஸ்கரன் CS WRU
தோழர் V.K. பரமசிவம் CHQ Advisor AIBSNLEA
இறுதியாக அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் ஒற்றுமையை பேணி பாதுகாக்க வேண்டுகோள் விடுத்தும் கூட்டமைப்பின் கன்வீனரும் BSNLEU மாவட்ட செயலருமான தோழர் எஸ். சூரியன் உரையாற்றினார்.
சிறப்பான ஏற்பாடு செய்திருந்த தல்லாகுளம் பகுதி தோழர்களை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.
எஸ். சூரியன்
மாவட்ட செயலர்
No comments:
Post a Comment