நடந்தவை . . . 07.06.13 தேனியில் தர்ணா
அருமை தோழர்களே !
நமது மதுரை மாவட்டத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 3 இடங்களிலும் தர்ணா நடத்துவது என்ற முடிவின் அடிப்படையில் 7.6.13 அன்று தேனியில் நடைபெற்ற தர்ணாவிற்கு கூட்டு தலைமையாக தோழர்கள் ராமசாமி SNEA, பாலகிருஷ்ணன் NFTE, செல்வம் SEWA, அறிவழகன் FNTO ஆகியோர் வழி நடத்தினர். துவக்கவுரையாக தோழர் லட்சம் NFTE மாநில அமைப்பு செயலர் உரையாற்றினார்.
78.2% IDA கோரிக்கையை விளக்கி
தோழர் சூரியன் DS-BSNLEU, தோழர் வி.கே. பரமசிவம் CHQ அட்வைசர் AIBSNLEA, தோழர் எஸ். கந்தசாமி DS-SEWA, தோழர் எல். கண்ணன் DS-WRU, தோழர் சேதுராமலிங்கம் AIPWA, தோழர் எம். நாராயணன் TEPU, தோழர் சுருளிச்சாமி SEWA, தோழர் மைக்கேல் சிரில் ராஜ் BSNLEU, தோழர் அண்ணாமலை DE/Theni, SNEA, ஆகியோர் உரையாற்றினர்.
தர்ணாவை தோழர் டி.கே. ஸ்ரீனிவாசன், BSNLEU முடித்து வைத்து உரையாற்றினார். தர்ணாவில் 11 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது பாராட்டுக்குரியது.
நன்றியுரை : தோழர் தேசிங்கு BSNLEU நிகழ்த்தினார். என்றும் தோழமையுடன்
எஸ். சூரியன்
மாவட்ட செயலர்
No comments:
Post a Comment