Wednesday 17 July 2013

16.07.2013 - விருதுநகரில் நடைபெற்ற பயிலரங்கம்

நமது தமிழ் மாநில சங்கம் சார்பாக விருதுநகரில்  (16.07.2013) ஆறு தென் மாவட்டங்களின் கிளைச்செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க முன்னணி தோழர்களுக்கு தொழிற்சங்க பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. மதுரை, காரைக்குடி, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் விருதுநகர் உட்பட ஆறு தென் மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் வகுப்பில் கலந்து கொண்டனர். 

தோழர் K.மாரிமுத்து, மாநிலத்தலைவர் வகுப்பிற்கு தலைமை வகித்தார்.தோழர் S.ரவீந்திரன் விருதுநகர் மாவட்ட செயலாளர் அனைவரையும் வரவேற்றார்.  நமது மாவட்ட செயலர் தோழர் S. சூரியன் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார். 


கருத்தரங்கில் பொதுச்செயலர் தோழர் P . அபிமன்யு உரையாற்றுகிறார் 
கருத்தரங்கில் மாநில செயலர் தோழர் S. செல்லப்பா உரையாற்றுகிறார் 


கருத்தரங்கில் சங்க அங்கீகார தேர்தலுக்கு பின் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து நமது மாவட்ட செயலர்
தோழர் S. சூரியன்  உரையாற்றுகிறார் 

பணி  ஒய்வு பெற்ற தோழர் பெருமாள்சாமியை வாழ்த்தி
நமது மாவட்ட செயலரின் உரை  



விருதுநகர் பயிலரங்கத்தில் கலந்து கொண்டோரில் ஓர் பகுதி 


பணி  ஒய்வு பெற்ற பெருமாள்சாமிக்கு நமது மாவட்ட செயலர்
தோழர் S. சூரியன் பொன்னாடை போர்த்துதல் 


தோழர் S. செல்லப்பா, மாநில  செயலர், சுருக்கமாக வகுப்பின் நோக்கம் குறித்து உரையாற்றித் துவக்கி  வைத்தார். தோழர் P. அபிமன்யு, பொது செயலாளர் பேசுகையில் விகிதாச்சார அடிப்படையில் அங்கீகாரம் என்பதில் நமது சங்க அங்கீகாரம் என்றும் உத்திரவாதப்படுத்தப்பட்டு உள்ளதை சுட்டிக் காட்டினார். 7-வது சரிபார்ப்பு தேர்தலில் மீண்டும் நமது சங்கமே முதன்மை சங்கமாக வெற்றி பெரும் என அறுதியிட்டு கூறினார். கொல்கத்தா மத்திய செயற்குழு கூட்டத்தின் முடிவுகள் பற்றியும் விரிவாக கூறினார். அதே நேரம் நமது நிறுவனத்தை லாபகரமாக மீட்சி செய்ய வேண்டிய அவசியம் பற்றியும், பணி கலாச்சாரம் மேம்பட வேண்டிய அவசியத்தையும் அவர் சுட்டி காட்டினார்.

78.2% IDA இணைப்பில் நமது சங்கத்தின் பங்களிப்பு  தான் பிரதானமானது என்பதையும் அவர் சூளுரைத்தார்.  நாம் நடத்த உள்ள போராட்டங்களின் கோரிக்கைகளை  விளக்கி மாநில, மாவட்ட  செயற்குழுக்களை  கூட்டி ஊழியர்களிடம்  போராட்ட உணர்வை வளர்க்க அனைவரும் முயற்சி எடுக்க பொது செயலர் வலியுறுத்தினார்.


என்றும் தோழமையுடன்,
S. சூரியன் - மாவட்ட செயலர். 

No comments: