அனைத்துவித அடிமைத் தளைகளிலிருந்தும் மனித குலத்தை விடுவிக்கச் செய்யும் தத்துவத்தைத் தந்த ஞானசூரியன் மாமேதை காரல் மார்க்ஸ்.அவரது நிழலாகவும் அவருக்கு நிகரான சிந்தனையாளராகவும் திகழ்ந்து அவருக்குப் பெரும் புகழ் சேர்த்த தத்துவமேதை ஏங்கெல்ஸ். முதலாளி மகனாகப் பிறந்திருந்தும் பாட்டாளி வர்க்கத்தின் நல்வாழ்வுக்காய் வாழ்நாளை அர்ப்பணித்த பெருமகன். ‘அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள், கம்யூனிச புரட்சி வருகிறது என்று. பாட்டாளிகள் தமது அடிமைச் சங்கிலியைத் தவிர இழப்பதற்கு ஏதுமில்லை; வெல்வதற்கோர் பொன்னுலகம் காத்திருக்கிறது. உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!’ எனும் நம்பிக்கையை விதைத்த நாயகன். பொதுவுடமை தத்துவத்தின் ஒளிவிளக்கு. அந்த ஒளி காட்டும் வழியில் நாம் தொடருவோம் பயணம்.
No comments:
Post a Comment