Saturday, 27 December 2014

LICயில், நிலக்கரியில் தனியார் - அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல்.

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49சதவீதமாக அதிகரித்து அனுமதிப்பது மற்றும் நிலக்கரி சுரங்கங்களை தனியாரிடம் அளிக்கும் அவசரச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையெழுத் திட்டுள்ளார் என குடியரசுத்தலைவர் மாளிகையின் செய்தித்தொடர்பாளர் வேணு ராஜமோனி தெரிவித் துள்ளார்.BJP அரசு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பொதுத்துறைகளை கலைத்து தனியாரிடம் தாரை வார்ப்பதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது மற்றும் நிலக்கரிச்சுரங்கங்களை தனியாருக்கு அளிப்பது ஆகியவை குறித்து சட்ட திருத்தங்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது.அமெரிக்கஜனாதிபதி ஒபாமாவின் இந்திய வருகைக்கு முன்னதாக அவரை மகிழ்விக்க இந்த மசோதாக்களை நிறைவேற்ற அவசரம் காட்டியது. ஆனால் மாநிலங்களவையில் ஆளுங்கட்சிக்குப் பெரும்பான்மை இல்லாததால் இந்த சட்ட முன்வரைவுகளை நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில் BJP அரசு, மிக நெருக்கடி காலங்களில் மட்டும் பயன்படுத்தக்கூடிய அவசரச் சட்டங்களை உருவாக்கி அவற்றை குடியரசுத்தலைவரின் ஒப்புதலோடு நிறைவேற்றத் துணிந்தது.இதற்கு நாடு முழுவதும் கடுமையான கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. இந்நிலையில் தற்போது குடியரசுத்தலைவர் இந்த சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் போராட்டம்: வி.ரமேஷ்
காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக அதிகரிக்க பாஜக அரசு சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த அவசரச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதைக் கண்டித்தும், அவசரச்சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் போராட்டம் அறிவித் துள்ளனர்.இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.ரமேஷ், அவசரச்சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டிசம்பர் 29 திங்களன்று நாடு முழுவதும்இதர சங்கங்களுடன் இணைந்து இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாகத் திரண்டு மதிய உணவு இடைவேளையில் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவோம் என அறிவித்தார்.
சட்டவிரோதமானது
-காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மசோதாவையும் நிலக்கரி மசோதாவையும் அவசரச் சட்டத்தின் மூலமாக செயல்படுத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது; இது அரசியல் சட்டத்திற்கு இழைக்கப்படும் மோசடியாகும் என்று தில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிராஜேந்தர் சச்சார் கண்டனம் தெரிவித்துள்ளார்.தில்லியில் பத்திரிகையாளர்களி டம் பேசிய சச்சார் கூறியதாவது:இந்த மசோதாக்களை மத்திய அரசு அவசரச் சட்டங்களின் மூலம்நிறைவேற்ற முயற்சிப்பதே இவற்றைநாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை என்பதை வெட்கங்கெட்ட முறையில் ஏற்றுக் கொள்வதாகவே பொருள். இதுவே குடியரசுத்தலைவர் இந்த சட்டங்களுக்கு அனுமதி மறுப்பதற்கான நியாயமான காரணமாகவும் உள்ளது. இந்த விசயம் அவ்வளவு அவசரமானது. ஏன் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நீட்டிக்கக் கூடாது?அவை கூடாதிருக்கும்போது ஒரு அவசர காலத்தில், அவசரச் சட்டத்தை உருவாக்குவதற்கான அதிகாரம் 1987ல் உச்சநீதிமன்றத்தால் அளிக்கப்பட்டிருக்கிறது. இதை ஒரு கடுமையான நெருக்கடி நிலையைஎதிர்கொள்ளவே பயன்படுத்த வேண்டும். அரசியல் காரணங்களுக்காக வக்கிரமாக இதைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. மத்திய அரசின் அவசரம் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் செய்துகொண்ட ஒரு ரகசிய உடன்படிக் கையை காப்பாற்றவா என்பது தெரியவேண்டும். அவர்கள் இப்படிப்பட்ட சட்டமியற்றுவதிலுள்ள உத்தரவாதமற்ற சூழ்நிலையில் முதலீடு செய்ய மாட்டார்கள். ஏன் இப்படிப்பட்ட அவசரம்?காப்பீட்டுக் கழகம் கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசுக்கு கொழுத்த லாபத்தை அளித்துக்கொண்டுதான் இருக்கிறது. நிலக்கரி குறித்த அவசரச் சட்டம் என்பது நிலக்கரி சுரங்கங்கள் தேசியமயமாக்கல் சட்டத்தை மீறுவதாகும். அந்த சட்டம் தனியார் நிலக்கரி சுரங்கங்கள் தோண்டுவதை அனுமதிக்கவில்லை. அவசரச் சட்டம் மூலம் நிலக்கரி சுரங்க தேசியமயச் சட்டத்தை மீறுவது எந்தவிதத்திலும் அனுமதிக்கப்பட முடியாதது. இவ்வாறு சச்சார் கூறியுள்ளார்.மத்திய அரசின் அவசரம் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் செய்து கொண்ட ஒரு ரகசிய உடன்படிக்கையை காப்பாற்றவா?நீதிபதி ராஜேந்தர் சச்சார்...

No comments: