Monday 8 December 2014

08.12.14 மதுரை மாவட்ட FORUM கூடி முடிவெடுத்தது ...

அன்பிற்கினியவர்களே ! நமது அகில இந்திய / மாநில FORUM கூடி எடுத்து விடுத்துள்ள  அறை கூவலை ஏற்று, மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில் மிக,மிக சக்தியாக அமல்படுத்துவதறக்காக,  08.12.14 திங்கள் அன்று மாலை  மதுரை மாவட்ட BSNL ஊழியர் சங்க அலுவலகத்தில், NFTE மாவட்ட செயலர் தோழர்.எஸ்.சிவகுருநாதன் தலைமையில் மதுரை மாவட்ட   FORUM கூடி  ஆக்கபூர்வமான பல முடிவெடுகளை  எடுத்தது ...
கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றும், நமது அகில இந்திய / மாநில FORUM கூடி எடுத்து அறிவித்துள்ள அறைகூவலை மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில் எவ்வாறு சிறப்பாக அமல்படுத்துவது போன்ற வழிமுறைகளையும், அனைத்து சங்கங்களிடனான ஒற்றுமையை மேலும்,மேலும் முன்னெடுத்து செல்ல வேண்டுமென,மதுரை மாவட்ட  FORUM சார்பாகவும், BSNLEU மாவட்டசங்கம்சார்பாகவும்வேண்டுகோள்விடுத்தும்,எஸ்.சூரியன்உரைநிகழ்த்தினார். 
மத்திய அரசே..!  BSNL நிர்வாகமே..!!
1.        காலியாக உள்ள இயக்குனர் காலியிடங்களை நிரப்பு 
2.        கோபுர பராமரிப்புக்காக  துணை நிறுவனம் ஏற்படுத்தாதே..
3.        கிராமப்புறங்களில்  சேவை வழங்குவதற்கான சன்மானம் வழங்கு.. 
4.        BSNL வளர்ச்சிக்கான உரிய உபகரணங்கள் வழங்கு..
5.        அனைத்து சொத்துக்களையும் BSNLக்கு மாற்று..
6.        BSNL - MTNL இணைப்பை நிறுத்து..
7.        அநியாயமாக  பெறப்பட்ட SPECTRUM கட்டணத்தை திருப்பி வழங்கு 
8.        வாங்கும் சம்பள அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பை நிர்ணயம் செய்..
9.        அலைவரிசை ஒதுக்கீட்டை  BSNLக்கு கட்டணமின்றி வழங்கு..
10.     அலைவரிசை விவாகாரத்தில் தனியாருக்கு துணை போகும் TRAI  முடிவை ரத்து செய்..
11.     ஊழியர் விரோத DELOITTEE குழு பரிந்துரையை தூக்கி ஏறி..
12.     BSNL வளர்ச்சிக்கு உரிய நிதி ஆதாரம் வழங்கு...
13.     BBNL - அகன்ற அலைவரிசை பரமரிப்பு நிறுவனத்தை BSNL உடன் இணை..
14.     4G தொழில் நுட்பம் வழங்கும் வசதியை BSNLக்கு கட்டணமின்றி வழங்கு..
15.     அலைவரிசை வசதி திருப்பி ஒப்படைக்கப்பட்ட பகுதிகளுக்கான கட்டணத்தை உடனே  வழங்கு..
16.     ஓய்வூதியர்களுக்கு 78.2 IDA இணைப்பை உடனே அமுல்படுத்து..
17.     ஊதிய மாற்றம் ஏற்படும்போது ஓய்வூதிய மாற்றம் ஏற்படுத்திட உத்திரவிடு..
18.     புதிய ஊழியர்களை ஆளெடுப்பு மூலம் பணியில் அமர்த்து...
19.     மத்திய மாநில பொதுத்துறை அரசு நிறுவனங்களில் BSNL சேவையைக் கட்டாய சேவையாக்கு..
20.     ITI நிறுவனம் மூலம் உபகரணங்கள் வாங்குவதை  கட்டயமாக்காதே...

கூட்டத்தில்   TEPUசங்கத்தின் மாவட்டச் செயலர் தோழர். என். முருகன், AIBSNLEAமாநில செயற்குழ உறுப்பினர் தோழர் எஸ். கருப்பையா, BSNLEUமாநில துணைத் தலைவர், தோழர்.எஸ். ஜான் போர்ஜியா, AIBSNLEAஅகில இந்திய அட்வைசர் தோழர். வி.கே. பரமசிவம், BSNLEUமாநில உதவிச் செயலர், தோழர் சி. செல்வின் சத்தியராஜ் ஆகியோர் விவாதத்தை செழுமை படுத்தி, பல்வேறு கடந்த கால அனுபவங்களோடு எதிர்வரும் போராட்டத்தை வலிமையாக நடத்திட ஆலோசனை வழங்கினர்.
இறுதியாககீழ்க்கண்டமுடிவுகள் எடுக்கப்பட்டது.
எதிர்வரும் 11.12.14 அன்று கிளைகள் தோறும் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அன்று  காலை& மதியம் அனைத்து களிலும், மதுரையில் காலையில், லெவல் 4 வளாகத்திலும், கீழமாசி வீதி தொலைபேசி நிலையம், எல்லிஸ் நகர், வில்லாபுரம்,  மதியம் 1 மணிக்கு பொது மேலாளர் அலுவலகத்திலும்  மற்றும் தேனி , திண்டுக்கல்  ஆகிய இடங்களிலும், ஆர்ப்பாட்டம் நடத்துவது.
  1. 11.12.14 மாலை 6 மணிக்கு மதுரை வடக்கு சித்திரை வீதி தொலை பேசியகம் முன்பாக மக்கள் சந்திப்பு இயக்கத்தில் - இந்தியா முழுவதும் 1 கோடி கையெழுத்து பெறுவதின் ஒரு பகுதியாக, மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில் 1 லட்சம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி துவக்கமாக, மக்கள் பிரதிநிதியான தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் தோழர்.ஆர்.அண்ணாதுரை MLA, அவர்கள்  முதல் கையெழுத்திட்டு துவக்கி வைப்பார்.
  2. 11.12.14 இரவு மதுரை மாவட்ட  FORUM கூடி அடுத்த கட்டமாக மாவட்டம் முழுவதும் நடத்த வேண்டிய சுற்று பயணதிட்டம்  ,2015-ஜனவரி மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான கருத்தரங்க பங்கேற்பு, 25.02.14 டெல்லி பாராளுமன்றம் நோக்கி பேரணி, 17.03.2015 முதல் நடைபெற உள்ள காலைவரையற்ற வேலைநிறுத்தத்தில் 100 சத பங்கேற்பு ஆகியவை குறித்து முடிவெடுக்கப்படும்.
  3.  கிளை சங்கங்கள், ஸ்தல மட்டத்தில் அனைத்து  சங்கங்களின் கூட்டு கூட்டத்தை கூட்டி அணைத்து முடிவுகளையும் சிரமேற்கொண்டு முழுமையாக,சக்தியாக அமல்படுத்திட வேண்டுமாய் மதுரை மாவட்டFORUM கேட்டுக்கொள்கிறது.
--- போராட்ட வாழ்த்துக்களுடன், என்றும் தோழமையுடன்...எஸ்.சூரியன் D/S-BSNLEU.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

சங்கங்களின் ஒற்றுமை
வெற்றியின் முதற்படி
வாழ்த்துக்கள் ஐயா