Friday 5 December 2014

‘இறைவனைத் தேடுவது வணிகமயமாக்கப்பட்டுவிட்டது’ . . .

இறைவனைத் தேடுதல்இன்றைக்கு வணிகமய மாக்கப்பட்டுள்ளது என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறினார்.திண்டுக்கல்லில் இலக்கியக்களம் அமைப்பின் சார்பில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-வீசும் தென்றல் அனைவருக்கும் பொதுவானது. அதுபோல `இறைவன்அனை வருக்கும் பொதுவானவர். இறைவனைத் தேடுவது இப்போது வணிகமயமாகிவிட்டது. கடவுளை மட்டுமல்ல யாரையும் நாம் ஏமாற்றக் கூடாது. தேவர்கள் பாற்கடலைக் கடைந்த பொழுது எல்லோரும் அமுதத்தை சாப்பிடத்தான் போட்டி போட்டார்கள்; ஆனால் அதில் விளைந்த விஷத்தை யாரும் உண்ண முன்வரவில்லை. அதனை இறைவன் தான் உண்டார். பிறருக்காக நாம் உண்ணும் விஷம் கூட அமுதமாகும் என்பது தான் இதன் செய்தி.அலெக்சாண்டர் தனதுபடைவீரர்களுடன் பாலை வனத்தில் பயணித்த போது அவருக்கு கடும் நா வறட்சி ஏற்பட்டு தாகம் ஏற்பட்டது. அலெக்சாண்டருக்கு மட்டும் தண்ணீர் கொடுக்கப் பட்டது. தனது படையினர் அனைவரும் தாகத்தில் இருக்கும் போது தனக்கு மட்டும் எதற்கு தண்ணீர் என்றுகுவளையை உடைத்தெறிந்தார். இதனால் சோர்வில் இருந்த அவரது படைவீரர்கள் தாகத்தை மறந்து உற்சாகத்துடன் போருக்குப் புறப்பட்டார்கள். இந்த சம்பவம் அலெக்சாண்டரின் தலைமைப்பண்பை உணர்த்துகிறது.பொதுவுடைமைச் சித்தாந்தம்எல்லாவற்றையும் தனக் கென இல்லாமல் பிறருக்கு வாரி வழங்குகிறவன் விளை நிலம் போன்றவன். அது போலத்தான் பொது வுடைமைச் சித்தாந்தமும்.ரமணர் ஒரு முறை தனது வழியில் சென்று கொண்டிருக்கும் போது தெரியாமல் ஒரு எறும்புப் புற்றின் மீது கால் வைத்து விட்டார். இதனால் வேத னையுற்ற அவர் தனது தவ றுக்கு பிராயச்சித்தமாக அதே புற்றில் கால் வைத்துஎறும்புகளிடம் கடி வாங்கிதனக்குத்தானே தண்ட னையை பெற்றுக் கொண் டார். எந்த உயிருக்கும் தீங்கு இழைக்கக்கூடாது என்பதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டு கிறது.எந்த தாயும் விலங்குகளைப் பெற்றெடுப்ப தில்லை. விலங்குச் சிந்தையில் இருந்து மாறுவதற்கு நாம் புத்தகங்களை வாசிக்க வேண்டும். இவ்வாறு பொன்னம் பல அடிகளார் பேசினார்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

அடிகளாரின் கருத்து அற்புதம்