Sunday, 7 December 2014

மாசு கணக்கீடு கருவி - ராஜபாளையம் மாணவி சாதனை!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ..அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் தனது அசத்தல் கண்டுபிடிப்பை இடம் பெற செய்து காண்போர் விழிகளை விரிய வைத்துள்ளார் மாணவி ரஜித்ரா. இவரது படைப்புக்கு இட்ட பெயர் "பொலியூசன் இண்டிகேட்டர்"

இது குறித்து மாணவி ரஜித்ரா கூறுகையில், "முதலில் இந்த மாதிரியான கண்டுபிடிப்பை நான் 6வது படிக்கும் போதே யோசித்துள்ளேன். தற்போது 9 வது படித்து வருகிறேன். என்னுடைய ஆசிரியர் செல்வ கணேஷ் அவரிடம் 6வது படிக்கும் போதே சொல்லியிருந்தேன். அவருடைய உதவியும், பெற்றோருடைய ஒத்துழைப் பினாலும்தான் சாதிக்க முடிந்தது. 5 மாத உழைப்பினால் உருவானது. இதை நான் சிறுவயதிலேயே ஆசைப் பட்டேன்.நம்முடைய  நாடு அசுத்தங்களால் நிறைந் துள்ளது. அதை சுத்தம் செய்வதே என்னுடைய நோக்கம். முதலில் குடிதண்ணீரில் தொழிற்சாலை கழிவுகளை கழிப்பதினால் எவ்வளவு மாசுபடுகிறது என்பது தெரியுமா?. அதனை தடுக்கவே இதை கண்டுபிடித்தேன். நான் கண்டுபிடித்த இயந்திரத்தில் யூனிட் பொருத்தியுள்ளேன். அதற்குடைய சாதனங்களை பயன்படுத்தியுள்ளேன். தயாரித்த கருவியை தொழிற்சாலை கழிவுகள் வெளியேற்றும் இடத்தில் பொருத்தினால் போதும், தொழிற்சாலைக்கான ஐபி அட்ரஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் எந்த தொழிற்சாலை அளவுக்கு அதிகமான கழிவுகளை தண்ணீரில் கலக்குகிறது என்று கண்டுபிடித்துவிடும். இதனால் தண்ணீர் மாசுப்பாடு தவிர்க்கப்படுகிறது. சுத்தமாவும் இருக்கும்.
எனக்கு மருத்துவராக வரவேண்டும் என்பது ஆசை. ஆனால் என் பெற்றோருக்கு விமான ஓட்டியாக வரவேண்டும் என்பது ஆசை. என் தந்தை ராமசுப்பிரமணியன் நான் படிக்கும் பள்ளியில் கிளார்க்காக பணியாற்றுகிறார். அம்மா வித்யா தனியார் பள்ளியில்ஆங்கிலஆசிரியராகஉள்ளார்.
தற்போது இந்த கண்டுபிடிப்புக்கு 1500 ரூபாய்  செலவு செய்துள்ளேன். இதை அரசு அமல்படுத்த வேண்டும் என்பதே என்னுடய கனவு. இதனால் மாசுப்பாடு குறைகிறது. வருங்காலத்தில் இந்தியா மாசுப்பாடு இல்லா நாடாக வளர வேண்டும்" என்றார். ...
மாணவி ரஜித்ராவிற்கு நமது பாராட்டுக்கள். 

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

வருங்கால விஞ்ஞானிக்குப் பாராட்டுக்கள்