அருமைத் தோழர்களே ! அனைத்து மத்திய சங்கங்களின் அறைகூவலான 10 அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி 05.12.14 வெள்ளி மாலை 4 மணிக்கு மதுரை தலைமை தபால் அலுவலகத்திற்கு அருகில், குட்செட் தெருவில் உள்ள மீனாட்சி பஜாரில் மிக. மிக எழுச்சியுடன் எதிர்ப்பு தின ஆர்ப்பாட்ட போராட்டம் நடைபெற்றது.
இந்திய நாட்டு மக்களுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை,தனியாருக்கு விற்கத்துடிக்கும் மத்திய ஆட்சியாளர்களைக் கண்டித்து, டிசம்பர் 5-ம் தேதி நாடு தழுவியஅளவில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் திரளாக கலந்து கொண்டனர்.. CITU, BMS, INTUC, AITUC, HMS, AICCTUC
, LPF ஆகிய தொழிற்சங்க அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தொலை தொடர்புத்துறை , இன்சூரன்ஸ் , பாதுகாப்புத்துறை உள்ளிட்டவை களை, தனியாருக்கு தாரை வார்ப்பதுடன், தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் மத்தியஅரசை கண்டித்தும், மாநில அரசு தொழிலாளர் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு
CITU மாவட்டசெயலர் தோழர். தெய்வராஜ் முன்னிலை வகுத்தார். CITU மாநிலச் செயலர் தோழர். ஆர்.கருமலையான் சிறப்புரை நிகழ்த்தினார். AITUC மாநில நிர்வாகி எம். நந்தாசிங் , INTUC - K.S.. கோவிந்தராஜ் ., LPF-சார்பாக D.மகேஸ்வரி மத்திய சங்க நிர்வாகியும் மற்றும் அனைத்து சங்கங்கள் சார்பாகவும் உரையாற்றினர்.பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தொலை தொடர்புத்துறை , இன்சூரன்ஸ், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட ஊழியர்கள் அனைவரும் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்ட கூட்டத்தில் திரளாக கலந்துகொண்டார்கள்.
நமது BSNLEU + TNTCWU சார்பாக 32 தோழர்களும், TEPU சார்பாக 6 தோழர்களும், NFTE சார்பாக ஒருவரும் நமது தொலை-தொடர்பு அரங்கத்திலிருந்து கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.
1 comment:
10 அம்சக் கோரிக்கைகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா
தங்களின் போராட்டம் வெல்லட்டும்
Post a Comment