Sunday 7 December 2014

' மின் இணைப்பு இருந்தால் ரேசனில் கெரசின் வாங்க முடியாது'

சாதாரண மக்கள் தலையில் மேலும் ஒரு தாக்குதலை மத்திய அரசு தொடுத்துள்ளது. மின் இணைப்பு பெறாத குடும்பங்களுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் மானியம் நேரடி பயன்மாற்ற முறையில் வழங்கப்படும் என மோடி அரசு முடிவு செய்துள்ளது.
அதிகளவில் மானியங்கள் வழங்கப்படுவதாக வெகுவாக விமர்சித்துவரும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மானிய விலை மண்ணெண் ணெய் திட்டத்தை ரத்து செய்வதாக கூறியுள்ளார்
பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில், மண்ணெண்ணெய் மீதான மானியம் ரூ.5,852.14 கோடியாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு பட்ஜெட்டில், மொத்த பெட்ரோலிய மானியம், (அதாவது பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் மண்ணெண்ணெய், எல்.பி.ஜி, டீசலுக்கான மானியம்) ரூ.63,427 கோடியாக இருக்கிறது. இனி அது வெட்டி குறைக்கப்படும் என்பதுதான் மத்தியரசின் அடுத்த கட்ட நடவடிக்கையாக உள்ளது. இப்படி பட்ட கசப்பு மருந்துகள் மக்களுக்கு மட்டும் இனி தொடர்ந்து கொண்டே இருக்கும் இந்த மோடி அரசில். மாறாக முதலாளிகளுக்கும், கார்பரேட் நிறுவனங்களுக்கும்  வரிச் சலுகைகள் வாரி வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

மின் விளக்குகள் இல்லாத வீடு இன்று எங்கே இருக்கிறது.