அருமைத்தோழர்களே ! சென்னையில் கிண்டியில் உள்ள CITU சங்க அலுவலக கூட்ட அரங்கத்தில் 17.12.14 அன்று நமது BSNLEU தமிழ்மாநில சங்கத்தின் செயற்குழு கூட்டம் நமது மாநிலத் தலைவர் தோழர்.எஸ். செல்லப்பா அவர்களின் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது ...
நமது அகில இந்திய பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்கள் நமது BSNLEUசங்க கொடியை ஏற்றி வைத்தார் நமது மாநில செயலர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் செயற்குழுவிற்கானவிவாத குறிப்பை சமர்ப்பித்து அறிமுக உரை நிகழ்த்தினார் .விவாதத்தில் நமது மாவட்டச் செயலர் தோழர்.எஸ். சூரியன் உட்பட அனைத்து மாவட்ட செயலர்களும் , புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள மாநில சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் .நமது பொது செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார் .மீண்டும் பொது செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் P.அபிமன்யு அவர்களுக்கு மாநில சங்கம் சார்பாக நினைவு பரிசை மாநில சங்க நிர்வாகி தோழர் சுவாமி குருநாதன் வழங்கினார் .புதிய துணை பொது செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்.எஸ். செல்லப்பா அவர்களுக்கு மாநில சங்க நிர்வாகி தோழியர் மல்லிகா நினைவு பரிசை வழங்கினார் .நமது மாவட்டத்திலிருந்து மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள்.எஸ். ஜான் போர்ஜியா, சி. செல்வின் சத்தியராஜ், பி. சந்திர சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
1.ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை 2015- ஜனவரி மாதம் நிறைவு செய்து, கடலூரில் 30.01.15 அன்று நடைபெறும் தமிழ் மாநில அளவில் ஆன கருத்தரங்கம் நடைபெறும் சமயத்தில் FORUM தலைவர்களிடம் ஒப்படைக்கும் வகையில் நமது பணிகளை துரிதப் படுத்தி நிறைவு செய்தாக வேண்டும்.
2..பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி நடைபெற உள்ள டெல்லி பேரணியில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து குறைந்த படசம் நமது BSNLEUசங்கத்திலிருந்து மட்டும் 5 பேர் கலந்து கொள்ள திட்ட மிட வேண்டும்.
3..BSNL வளர்சிக்கான மாவட்ட அளவில் ஆன கருத்தரங்குகளை விரைந்து உடனடியாக நடத்திட வேண்டும் 4..மத நல்லிணக்க ஒற்றுமையை வலியுறுத்தி தமிழ் மாநில அளவில் ஆன கருத்தரங்கம் ஏப்ரல் முதல் வாரத்தில் மதுரையில் நடைபெறும். நமது .மதுரை மாவட்ட சங்கம் அதற்கான தயாரிப்பு பணியில் இறங்க வேண்டும்.
5.தொழிற் சங்க வளர்சிக்கான மண்டல வாரியான கருத்தரங்குகளை மே, ஜூன் மாதங்களில் நடத்துவது .
6. நவம்பர் 27-ல் நமதுC&Dஊழியர்களின் JAC சார்பாக நடைபெற்ற வேலை நிறுத்தம் பற்றிய ஆய்வில் 90.70% அளவில் நீலகிரி மாவட்டம் மிக சிறப்பாக நடத்தியுள்ளதை மாநில சங்கம் பாராட்டியது . அதே போல் தர்மபுரி மாவட்டத்திலும் 85 % அதிகமான தோழர்கள் பங்கேற்றதை மாநில சங்கம் பாராட்டியது . நமது மதுரை மாவட்டத்தில் வேலை நிறுத்த பலவீனங்களை களைவது பற்றி விரிவான பரிசீலனையை நடத்த .வேண்டியுள்ளது.
7. கடலூரில் 30.01.2015 அன்று நடைபெறும் மாநில அளவிலான கருத்தரங்கத்திற்கு நமது மதுரை மாவட்டத்திலிருந்து அதிக பட்ச தோழர்களை திரட்டிட வேண்டும்.
No comments:
Post a Comment