நமது இந்திய நாட்டில் வேலை வேண்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்கள் 4.5 கோடி பேர் என, 4 டிசம்பர் 2014 அன்று பாராளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட தகவல் ஆகும். இந்த தகவல் என்பது, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்தால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பதிந்துள்ளவர்களின் எண்ணிக்கையாகும்.
வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து மேலும் இன்றோ நாளையோ அவர்களுக்கு ஒரு அரசு வேலை கிடைக்கும் என்று வேலையற்றவர்களின் எதிர்பார்ப்பு இருந்தது. அரசாங்கத்தில் வேலைகள் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகின்றன ஏறக்குறைய, இப்போது அது இல்லாமல் போய்விட்டது. அரசு துறைகள் பல தனியார் மயமாக்கப் பட்டு வேலைகள் குறைந்து பணியிடங்கள் இல்லை. அரசு, அதன் தார்மீக பொறுப்புகளில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றது.
தொலைத்தொடர்புத் துறையில் . இருபது ஆண்டுகளுக்கு முன் ஆறு லட்சம் தொழிலாளர்கள் இருந்தனர். டெலிகாம் சேவை பிரிவில் .3,50,000 ஊழியர்கள் பணியாற்றிகொண்டு இருந்த போது , 1.10.2000 த்தில் BSNL என்ற நிறுவன மயமாக்கப்பட்டு. அடுத்த 14 ஆண்டுகளில், ஊழியர்களின் எண்ணிக்கை இன்று 2,35,000ஆக ஊள்ளது. அதனால் 50% க்கும் மேல் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.இந்த நிலைமைதான் , ரயில்வே, பாதுகாப்பு மற்றும் ஏனைய மத்திய அரசு தொழில் நிலை உள்ளது.இப்படி உள்ள சூலில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள ஒரு நபர் தற்போது 30 ஆண்டுகள் கழித்து வேலை கிடைத்து ஒரு குறுகிய காலத்தில் பனி செய்து ஓய்வு பெற்றால். அவர் எந்த ஓய்வூதியத்தை பெற முடியும். தற்போது உள்ள இந்த மோசமான நிலைமையை மேம்படுத்த அரசு என்ன செய்ய போகிறது?
1 comment:
வருத்தமாக இருக்கின்றது ஐயா
இவர்கள் எல்லாம் என்று வேலை பெறுவது,
இவர்களின் வாழ்க்கை எல்லாம் என்று வளமாகுமோ
Post a Comment