Tuesday 8 March 2016

மார்ச் -7 மதுரையில் நீதி கோரி ஆர்ப்பாட்டம் ...

அருமைத் தோழர்களே ! மதுரை BSNL மாவட்ட நிர்வாகம் மேல் அமைப்புகளான, கார்பரேட், மாநில நிர்வாகங்கள் வழிகாட்டுதலை கூட அமல்படுத்துவதில் அலட்சியம் செய்வதும், மாவட்ட அளவில் பலமுறை விவாதித்து ஏற்கட்டப்பிரச்சனையில் கூட அமல்படுத்த மறுப்பது  போன்ற  பொருத்தம்மில்லாத, ஏற்க முடியாத நடை முறைகளை கடைபிடிப்பதை ஒரு போதும் ஏற்கமுடியாது. ஏற்கனவே, போடப்பட்ட உத்தரவுகளை கீழ்மட்டத்தில் அமலாகவில்லை யெனில் முறைப்படுத்த வேண்டிய, மனித வள மேம்பாட்டு அதிகாரி (DGM-Hr) வேடிக்கை பார்ப்பதும், அதை சரி செய்ய வேண்டிய பொதுமேலாளர் தலையிடா கொள்கை கடைப்பிடிப்பதும்,  அனுமதிக்க முடியாது யென அறிவிப்பு கொடுத்துத்தான் நமது ஆர்பாட்டம் நடத்தினோம். மதுரை மாவட்ட நிர்வாகத்தின் இந்த முறையற்ற நிலைபாட்டை நமது  BSNLEU தமிழ் மாநில சங்கத்திற்கு தெரிவித்துள்ளோம் . மாநில சங்கம் தலையிடுவதாக கூறியுள்ளது. அதன்பிறகு மாநில சங்கம் வழிகாட்டுதலின் அடிப்படையில் அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும். 
7-3-16 ஆர்பாட்டத்திற்கு BSNLEU + TNTCWU மாவட்ட த்தலைவர்கள் முறையே, தோழர்கள் சி. செல்வின் சத்யராஜ், கே.வீரபத்திரன் ஆகியோர் கூட்டுத்தலைமை பொறுப்பேற்றனர். ஆர்பாட்டத்தின்  கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பட்டது. BSNLEU + TNTCWU மாவட்ட செயலர்கள் முறையே, தோழர்கள் எஸ். சூரியன், என். சோணைமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரை நிகழ்த்தினர். மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள், எஸ். ஜான் போர்ஜியா,  பி . சந்திர சேகர் இருவரும் மாவட்ட நிர்வாகத்தின் நிலைபாடு மட்டற்ற வேண்டிய ஒன்று என்பதை எடுத்துக் கூறினர். நிறைவாக மாவட்ட உதவிச் செயலர். தோழர்.எ. நெடுஞ்சழியன் மாற்று சங்கங்களின் மட்ட ரகமான பொய் பிரச்சாரத்தை சாடியதோடு  ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி உரை நிகழ்த்தினார். சிவன்ராத்திரி நாள் என்ற போதும் திரளாக கலந்து கொண்ட தோழர், தோழியர்களுக்கும், தங்களது பணி நிறைவிற்கு பின்னும் தொடர்ந்து அனைத்து நிகழ்விலும், தஙகளை முழுமையாக ஈடுபடுத்தி வழிகாட்டி வரும் தோழர்கள் ஜி.கே. வெங்கடேசன், எஸ். இராமலிங்கம்  ஆகிய இருவருக்கும் நமது மாவட்ட சங்கத்தின் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றோம்.

No comments: