அருமைத் தோழர்களே ! நமது BSNLEU சங்கத்தின் அடையாளம் இதுதான் என்ற மன நிறைவோடு நடைபெற்ற இதயத்திற்கு நெகிழ்வான ஒரு நிகழ்வு . . .என்ன வென்றால். ஒட்டன்சத்திரத்தில் பணியில் இருந்த ஒப்பந்த ஊழியர் கடந்த முந்தைய மாதம் மாரடைப்பால் திடீரென இறந்துவிட்டார் என்ற செய்தி, அந்த குடும்பத்தையும் நம்மையும் மிக அதிர்சிக்கு உள்ளாக்கியது. நமது BSNLEU+TNTCWU இரு மாவட்ட சங்கங்களின் சார்பாக குடும்ப நிவார்ண நிதியை திட்டமிட்டோம். குறுகிய காலத்தில் நமது அனைத்து கிளைச் சங்கங்களும் களப்பணியாற்றி 28.03.2016 விரிவடைந்த செயற்குழுவில் நிதி வழங்க ஏற்பாடு செய்திருந்தோம். நிதி 95,000 திரண்டுஇருந்தது, இதை கண்ணுற்ற தோழர்.S. செல்லப்பா AGS அவர்கள் மாநில சங்கம் சார்பாக ரூபாய் 5000 சேர்த்து ஒரு லட்சமாக மறைந்த தோழர் கே.லெட்சுமணன் மனைவியிடம் நிதி அளிக்கப்பட நிகழ்வு , பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நலனில் நமது சங்கம் அக்கறை கொண்டுள்ளது என்பதை பறை சாற்றியது.
No comments:
Post a Comment