பொதுத் துறை வங்கி களை பாதுகாக்கக் கோரி, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் முழு நாள் தர்ணா மார்ச் 2ல் தலைநகர் தில்லியில் சம்மேளனத் தலைவர் சி.ஜே.நந்த குமார் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் தொடக்கவுரை ஆற்றினார். நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு வங்கிகளைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான சம்மேளன உறுப்பினர்கள் தலைநகரில் புதனன்று திரண்டிருந்தனர். ஹர்விந்தர் சிங் (அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு), ரஸ்தோகி (அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்), வினைல் சக்சேனா (தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு), நாகராஜன் (அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் ), ஜோஸ் டி ஆபிரகாம் (நபார்டு ஊழியர் சங்கம்), தி தமிழரசு (கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பிரதீப் பிஸ்வாஸ், செயலாளர் கே.கிருஷ்ணன்,ரிசர்வ் வங்கி ஊழியர் சங்க அகில இந்தியத் தலைவர் ராஜீவன் ஆகிய மூவர் குழுவினர் நிதியமைச்சரை சந்தித்து கோரிக்கை விண் ணப்பத்தை வழங்கினர்.தேசத்தின் சொத்தான வங்கித்துறை உள்ளிட்ட நிதித்துறை பொதுத் துறையில் வலுவாக் கப்பட வேண்டும், தனியார் முயற்சிகள் கைவிடப்படவேண்டும், வராக்கடன் கள் வைத்துள்ள பெருந் தொழில் நிறுவன அதிபர் கள் மீது கடுமையாக நட வடிக்கை எடுத்து வசூல் செய்யப்பட வேண்டும், முன்னுரிமைக் கடன்கள் உள்ளிட்ட சாதாரண மக்கள், விவசாயத் துறை, சிறு தொழில் வளம் பெற வங்கிகள் சேவை தொடர பொதுத்துறை வங்கிகளுக்குத் தேவையான மூலதன உதவி வழங்கப் பட வேண்டும், லட்சக் கணக்கில் உள்ள காலியிடங்களில் புதிய ஊழியர்களை நியமனம் செய்து வாடிக்கையாளர் சேவை சிறந்த முறையில் நல்கஏற்பாடு செய்ய வேண் டும், காண்டிராக்ட் மயம், கேசுவல் மயம், அவுட் சோர்சிங் ஆகியவை உடனே கைவிடப்பட வேண்டும், கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவைத்தான் மத்திய அரசிடம் சேர்ப் பித்துள்ளது இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்.
No comments:
Post a Comment