Thursday, 24 March 2016

நமது BSNL + யூனியன் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் . . .

அருமைத் தோழர்களே ! நமது BSNL நிறுவனம் + யூனியன் வங்கி இடையேபுரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு ள்ளது கடந்த மூன்று மாதங்களாக முடிவுக்கு வராதயூனியன் வங்கியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்மீண்டும்    நமது BSNL உடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்க்கான தொடர் முயற்ச்சியை எடுத்த நமது BSNLEU மத்திய சங்கத்திற்கு நன்றி..BSNL - UNION BANK OF INDIA ஒப்பந்தம்  01/01/2016 முதல் 31/12/2016 வரை அமுலில் இருக்கும்.
* தனி நபர்க்கடன் 10 லட்சம் வரை வழங்கப்படும்.
* தனி நபர்க்கடன் வட்டி விகிதம் 12.15 சதம்.
* பெண்களுக்கு 0.25 சதம் வட்டியில் சலுகை.
* வங்கியில் கடன் பெற்ற ஊழியர்கள் இறக்க நேர்ந்தால் அவர்களது   குடும்ப ஓய்வூதிய விண்ணப்பங்கள் வங்கியின் கடனைக் கட்டியபின்புதான் அனுப்பப்பட வேண்டும் போன்ற கடுமையான விதிமுறைகளை யூனியன் வங்கி கூறியதால் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுல்படுத்தப்படவில்லை. தற்போது அது போன்ற விதிமுறைகள் இல்லாமல் ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளது. ஆயினும் கடன் பெறும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் இருக்கக் கூடாதென புதிய கட்டுப்பாட்டை யூனியன் வங்கி விதித்துள்ளது

No comments: