அருமைத் தோழர்களே ! நமது BSNLEU எல்லிஸ் நகர் கிளையின் மாநாடு 14-07-16 அன்று கிளைத்தலைவர் தோழர் எம். முருகேசன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தோழர் A. மெக்கலே அஞ்சலி உரை நிகழ்த்தினார். .கிளைச் செயலர் தோழர்.S.. ராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.. . .
அனைவரும் பாராட்டத்தக்க அளவில் முதல் நிகழ்ச்சியாக மரக்கன்று நாடும் விழா நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர்.எஸ். சூரியன் ஒரு மரக்கன்றையும், கிளைத் தலைவர் தோழர். எம். முருகேசன் ஒரு மரக்கன்றையும் நட்டனர். இதற்கான ஏற்பாட்டை செய்த எல்லிஸ் கிளையையும், மரக்கன்றை கொண்டுவந்த தோழர். ராமகிருஷ்ணன் J.E அவர்களையும் நமது மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.
அதன் பின் கிளைமாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட செயலர் தோழர். எஸ். சூரியன் உரை நிகழ்த்தினார். கிளைச் செயலர் தோழர்.S.. ராஜேந்திரன் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். தோழர். R. கண்ணன், வரவு-செலவு கணக்கை சமர்ப்பித்தார். அதன்பின் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவர், செயலர், பொருளர் முறையே தோழர்கள் R. கண்ணன், S.. ராஜேந்திரன், C. முகமது ஜமாலுதீன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் ஒருமனதாக தேர்ந்தெடு க்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள், S. மானுவேல் பால்ராஜ், N. செல்வம், R. சண்முகவேல் ஆகியோர் உரை நிகழ்த்தினார். TNTCWU மாவட்ட செயலர் தோழர்.என். சோணைமுத்து வாழ்த்துரை வழங்கினார். அதன்பின் மாநில உதவிச் செயலர் தோழர். சி. செல்வின் சத்தியராஜ் சிறப்புரை நிகழ்த்தினார். இறுதியாக தோழர். R. கண்ணன் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment