Thursday, 21 July 2016

20-07-16 விறு விருப்புடன் நடைபெற்ற வில்லாபுரம் மாநாடு.

அருமைத் தோழர்களே ! 21-07-16 அன்று மாலை வில்லாபுரம் தொலைபேசியக்கத்தில் தோழர். S. செல்வம் தலைமையில் நடைபெற்றது. நமது BSNLEU சங்க கொடியை கிளை செயலர் தோழர். P.  கிருபானந்தன் ஏற்றிவைத்தார். மாநாட்டில் அஞ்சலி உரையை  தோழர் ரகுநாதன்  நிகழ்த்தினார். வரவேற்புரை மாவட்ட சங்க நிர்வாகி தோழர் .S.  மானுவேல்  நிகழத்தினார்.
மாநாட்டை துவக்கிவைத்து மாவட்ட செயலர் தோழர். S. சூரியன் உரை நிகழ்த்தினார். அதன் பின் ஆண்டறிக்கை , வரவு-செலவு  சமர்ப்பிக்கப்பட்டு  ஏற்கப்பட்டது. நடைபெற்ற நிர்வாகிகள் தீர்வில், முறையே, தலைவர், செயலர், பொருளர் பதவிக்கு தோழர்கள் மானுவேல் பால்ராஜ், அருள்மொழி, ஆரோக்கிய மகிமை தாஸ்  உட்பட அனைத்து நிர்வாகிகளும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
புதிய நிவாகிகளை வாழ்த்தி  நமது மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள், V. சுப்புராயலு, N. செல்வம்,  R. சண்முகவேல் , C.  செல்வின் சத்தியராஜ்  ஆகியோர் உரை நிகழ்த்தினர். இறுதியாக தோழர் அருள் மொழி நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.

1 comment:

Unknown said...

NOT SATISFIED FOR SELECTION OF MEMBERS BY KALIDASS R JE