Sunday, 17 July 2016

14-07-16 மதுரை GM.அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் . . .

அருமைத் தோழர்களே ! மதுரை மாவட்டத்தில் கேபிள் பணியில் இதுகாறும் பணியாற்றி வருபவர்கள் 159  ஊழியர்கள்  பேர் ஆகும். ஆனால் திடீரென தற்போது விடப்பட்டுள்ள  டெண்டரில் 140 பேர் ஊழியர்கள்  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது நிர்வாகத்தால். மேலும் ஒவ்வொரு மாதமும் சம்பளம் ஒப்பந்த ஊழியர்களுக்கு காலதாமதமாகவே, வழங்கப்படுகிறது. ஆகவே, நிர்வாகத்தின் இந்த நிலைப்பாட்டை மாற்ற கோரி  14-07-16 அன்று  மதுரை GM.அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்  தோழர்கள், சி . செல்வின் சத்தியராஜ் & கே. வீரபத்திரன் ஆகியோர் கூட்டு தலைமையில் நடைபெற்றது. 
 ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி BSNLEU மாவட்ட  செயலர் தோழர்.S. சூரியன் , TNTCWU மாவட்ட செயலர் தோழர் என். சோணைமுத்து ஆகியோர் விளக்க உரை நிகழ்த்தினார்கள். கிட்டத்தட்ட 40 பெண்கள் உட்பட நூற்று கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன குரல் எழுப்பினர். இறுதியாக BSNLEU  மாவட்ட பொருளர் தோழர்.எஸ். மாயாண்டி நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். 

No comments: