Sunday, 10 July 2016

9-7-16 , சீர் மிகு திண்டுக்கல் நகர் கிளை மாநாடு . . .

அருமைத் தோழர்களே  ! 9-7-16  அன்று நமது BSNLEU திண்டுக்கல் நகர் கிளை சங்கத்தின்  மாநாடு , கிளைத் தலைவர்  தோழர். எஸ். பரிமள ரெங்கராஜ் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நமது சங்க கொடியை தோழர்.எ.ராஜு ஏற்றிவைத்தார். வரேவேற்புரையும், அஞ்சலியுரையும் தோழர். ஜே. ஜோதிநாதன் நிகழ்த்தினார். மாநாட்டின் துவக்க உரையை மாவட்ட செயலர் தோழர்.எஸ். சூரியன் நிகழ்த்தினார். மாநாட்டின் ஆண்டறிக்கை, வரவு-செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. வாழ்த்துரையாக SNEA கிளைச்செயலர்  தோழியர்  சுசிலா மேரியும், NFTE கிளைச் செயலர்கள் தோழர். செபஸ்டியான் . தோழர். அருளானந்தம், BSNLEU திண்டுக்கல் புறநகர் கிளை செயலர் தோழர். A. குருசாமி, வேடசெந்தூர் கிளை செயலர் தோழர். எம். சௌந்தரராஜன், TNTCWU கிளைச்செயலர் தோழர். சக்திவேல் ஆகியோர் பேசினார். பணி நிறைவு பெற்ற தோழர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவிரவிக்கப்பட்டது  நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது...

அதன்பின் புதிய நிர்வாகிகளை வாழ்த்தியும், சிறப்புரையுமாக மாநில உதவிச் செயலர் தோழர்.சி. செல்வின் சத்யராஜ், மாநில துணைத் தலைவர் தோழர்.எஸ். ஜான் போர்ஜியா ஆகியோர் பேசினார். இறுதியாக பொருளர் தோழர்.A. பாக்யராஜ் நன்றி கூற மாநாடு இனிதே  நிறைவுற்றது. 

No comments: