அன்பார்ந்த தோழர்களே!தோழியர்களே!!
நமது BSNL ஊழியர் சங்கத்தின் 8ஆவது அகில இந்திய மாநாடு 31, டிசம்பர் 2016 முதல் 3,ஜனவரி 2017 முதல் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. வரலாற்று சிறப்பு மிக்க நமது மாநாட்டிற்கான லோகோ ஒன்றை உருவாக்க வேண்டி உள்ளது. இதனை உருவாக்கி தர விருப்பம் உள்ள தோழர்கள் ஜூலை 8ஆம் தேதிக்குள் மாநில சங்க அலுவலகத்திற்கு கிடைக்குமாறு அஞ்சலிலோ, தமிழ் மாநில சங்கத்தின் மின்னஞ்சல் முகவரியான bsnleutnc@gmail.com என்ற
முகவரிக்கோ அனுப்பி வைக்குமாறு தமிழ் மாநில சங்கம் தோழமையுடன் கேட்டுக் கொண்டுள்ளது. வரும் லோகோக்களில் ஒன்றை தமிழ் மாநில சங்கத்தின் மையம், மத்திய சங்கத்தின் ஆலோசனையுடன் தேர்ந்தெடுக்கும். நமது அகில இந்திய மாநாட்டிற்காக, கலை நயம் மிக்க நமது தோழர்களின் ஆலோசனையை நமது தோழர்கள் வழங்க வேண்டுமாய் மதுரை மாவட்ட சங்கம் கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment