அருமைத் தோழர்களே ! நமது திருமங்கலம் கிளையின் மாநாடு 27-07-16 அன்று மாலை தொலைபேசியகத்தில் , தோழர் நாகராஜ் தலைமையில் மிகவும் சிறப்புடன் நடை பெற்றது நமது சங்க கொடியை கிளைத்தலைவர் தோழர் நாகராஜ் ஏற்றிவைத்தார். மாநாட்டில் அஞ்சலியுரையை தோழர் அஜ்மல் கான் நிகழ்த்தினார். வரவேற்புரையை கிளை செயலர் தோழர். சுப்புராஜ் நிகழ்த்தினார். . .
மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட செயலர் தோழர் .எஸ். சூரியன் உரை நிகழ்த்தினார். அதன்பின் ஆண்டறிக்கை, வரவு-செலவு சமர்ப்பிக்கப்பட்டு ஏற்கப்பட்டது. நிர்வாகிகள் தேர்வில் தலைவர், செயலர், பொருளர் முறையே, தோழர்கள் நாகராஜ், கண்ணன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். . .
தோழர்கள், நெடுஞ்செழியன், நாராயணன் , பிச்சைக்கண்ணு, சின்னையன், வீரபத்திரன் மற்றும் SNEA மாநில உதவிச் செயலர் தோழர். அழகர்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தொடர்ந்து மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள். சி. செல்வின் சத்தியராஜ், பி . சந்திரசேகர் ஆகிய இருவரும் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இறுதியாக தோழர் அஜ்மல் கான் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment