ஐதராபாத்: காந்தி பெயரில் அவரது படத்துடன் பீர் விற்பனை செய்த அமெரிக்க மதுபான நிறுவனம் மீது கோர்ட்டில் பொதுநலவழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த நியூ இங்கிலாந்த் பிரிவிங் என்ற மதுபானம் தயாரிப்புநிறுவனம் காந்திபூட் என்ற பெயரில் மூன்று வித சுவைகளுடன் புதிய பீர் ரகத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் காந்தியின் படம் இடம் பெற்றுள்ளது. அந்நிறுவனம் காந்தியின் உண்மை, அன்பை போதிக்கும் கொள்கை போன்று இந்த பீர் சுத்தமானது என அவரது பெயரை நிறுவனத்தின் விளம்பரதூதராகவும் சித்தரித்துள்ளது. இந்தியாவின் தேசத்தந்தை காந்தியின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக புகார்எழுந்தது.
இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜனார்த்தன் ,நம்பள்ளி மாவட்ட, 11-வது மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். .அதில் இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மாகாந்தி, உலகம் முழுவதும் புகழ்பெற்ற தலைவர் அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க மதுபான தயாரிப்புநிறுவனம் அவரது படத்தினையும்,பெயரையும் பீர் விற்பனைக்கு அறிமுகப் படுத்தி யுள்ளது.இது 1971-ம் ஆண்டு இந்திய தேசியத்தின் மதிப்பையும்,மாண்பையும் தடுக்கும், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 124-ஏ -ன் படி தேசத்தந்தை காந்தியை அவமரியாதை செய்வதாகும். இது கண்டனத்திற்குரியது.எனவே அந்த அமெரிக்க நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி மன்னிப்புகோர உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

1 comment:
கண்டனத்திற்கு உரிய செயல்
Post a Comment