புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லஷ்மண் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 93.
புனேவில் உள்ள தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிறுநீரக தொற்று காரணமாக அனுமதிக்
கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.சிறுநீரக பாதிப்பு மற்றும் பல்வேறு உறுப்புகள் செயலிழந்த நிலையில், அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.முன்னதாக, ஆர்.கே.லஷ்மணுக்கு கடந்த 2010-ல் பக்கவாதம் ஏற்பட்டு, அவரது உடலின் வலதுபுறம் செயலிழந்ததுடன் பேசும் திறனும் குறைந்தது.ஆர்.கே.லஷ்மண் 24 அக்டோபர், 1921 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்தார். இவரின் சகோதரர் பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயண். 'டைம்ஸ் ஆப் இந்தியா'வில் அறுபதாண்டு காலமாக 'யூ செட் இட்' (You Said it ) என்கிற தலைப்பில் காமன்மேன் (Common Man) என்கிற கதாபாத்திரத்தின் மூலம் இவர் அடித்த எள்ளல்கள் அபாரம்.'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் ஒன்றரை நூற்றாண்டு முடிவடைந்த விழாவில் ஓர் அஞ்சல் தலையே அந்த 'காமன்மேன்' நினைவாக வெளியிடப்பட்டது. ஆர்.கே. நாராயனின் 'மால்குடி நாட்கள்' தொலைக்காட்சி தொடருக்கு இவரே ஓவியம் வரைந்தார்.எளிய ஆனால் ஆழ்ந்த சமூகப் பார்வைக்கு நல்ல எடுத்துகாட்டு இவரின் கார்ட்டூன்கள். ஆசியன் பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் முத்திரையும் இவர் வரைந்ததே. இவரை ஒட்டி ஒரு நகைச்
சுவை தொடரே இந்தியில் வந்தது. இவரின் கார்ட்டூன்கள் நூல்களாக வந்து நல்ல விற்பனை ஆகின.லஷ்மணின் தூரிகை தெளித்த வெளிச்சத்தில் எத்தனையோ பேர் இப்பொழுது மின்னுகிறார்கள். இப்பொழுதும் அவர் உருவாக்கிய 'காமன்மேன்' சிலை மும்பையில் நிற்கிறது. அவரின் தைரியம் பலரால் வசீகரிக்கப்
பட்டது.பத்ம விபூஷண், மகேசச விருது உள்ளிட்ட உயரிய கவுரங்களைப் பெற்றவர், கார்ட்டூனிஸ்ட் R.K..லஷ்மண்.அன்னாரது மறைவிற்கு BSNLEU மதுரை மாவட்ட சங்கம் அஞ்சலி செலுத்துகிறது.
No comments:
Post a Comment