வறுமையின் காரணமாக தந்தையுடன் சேர்ந்து பிணத்தை எரிக்கும் வெட்டியான் வேலை செய்து கொண்டு, மேல் படிப்பு படித்து வருகிறார் சிவகங்கை மாவட்டம், கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த வாலிபர் சங்கர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தில் வசிக்கும் முருகேசன்-பஞ்சவர்ணம் தம்பதிக்கு 5 பிள்ளைகள். பள்ளி படிப்பை முடித்த சங்கருக்கு கல்லூரி எட்டாத இடமாக இருந்தது. ஆனாலும் தன்னுடைய ஆர்வத்தின் காரணமாக தந்தையுடன் வெட்டியான் வேலைக்கு சென்று, அதில் குறைந்த பணம் ரூ.
300தான் கிடைக்கும். அதுபோக ரயில்வே ஸ்டேசனில் காபி, ஸ்நாக்ஸ், டீ என விற்று அதில் கிடைக்கும் வருமானத்திலும் படித்துவருகிறார்.இதுமட்டுமில்லாமல் தன்னுடய தாய், தந்தையையும் காலத்தின் சூழ்நிலையால் இவரே குடும்பத்தையும் பார்த்து வருகிறார். கிடைக்கும் வருமானத்தில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் படித்து முடித்து எம்எஸ்சி படிக்க சென்றார்.இவருடைய வீடு குடிசைதான். நாட்டிற்கு வெளிச்சம் கிடைத்தும் இவர் வீட்டிற்கு இன்னும் வெளிச்சம் கிடைக்கவில்லை. அதனால் படிப்பை ரயில்வே ஸ்டேசனிலும், பிணம் எரிக்கும் வெளிச்சத்திலும் படித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் டான்ஸ் கற்றுகொண்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். ஓவியம் வரைந்து கல்லூரிக்கு பல பரிசுகளை வென்றுள்ளார்.
கல்லூரிகளுக்கிடையே நடக்கும் ஓவிய போட்டியில் முதல் பரிசும் 'வன உயிரின வார விழா' என்ற தலைப்பில் சிவகங்கை மாவட்டத்தில் முதல் பரிசும், மாநில அளவில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார். மாநில அளவில் ஓவிய சுடர்மணி விருது பெற்றுள்ளார். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதே சங்கரின் ஏக்கமாக இருக்கிறது."உதவும் கரங்கள் பல உண்டு; அவர்களால் நானும் பயனடைய ஆசைப்படுகிறேன்" என்கிறார் சங்கர். நிறைவேறுமா சங்கரின் ஆசை
No comments:
Post a Comment