Saturday, 10 January 2015

09.01.15 கோவையில் TNTCWU மாநிலச் செயற்குழு கூட்டம்...

அருமைத் தோழர்களே ! 09.01.15  வெள்ளியன்று கோவை நகரில் உள்ள இன்சூரன்ஸ் ஊழியர்களின் AIIEA சங்க கட்டிடத்தில் நமது தமிழ் மாநில   TNTCWU சங்கத்தின்  மாநிலச் செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் தோழர் எம். முருகையா அவர்களின்  சீரிய தலைமையில் நடைபெற்றது ... 

 TNTCWU சங்கத்தின்  மாநிலச் செயற்குழு கூட்டத்தில்  நமது BSNLEU சங்கத்தின் அகில இந்திய உதவிச் செயலர் தோழர்.எஸ். செல்லப்பா, மாநிலச் செயலர் தோழர்.எ. பாபுராதா கிருஷ்ணன்,   TNTCWU சங்கத்தின்  மாநில துணைத் தலைவர் தோழர்.கே. மாரிமுத்து ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நமது மதுரை மாவட்டத்திலிருந்து மாநில அமைப்புச் செயலர் தோழர்.எ. அன்பழகன், மாவட்ட செயலர் தோழர்.என், சோனைமுத்து ஆகியோர் செயற்குழு விவாதத்தில் கலந்து கொண்டனர்.
செயற்குழு கீழ்கண்ட தகவலுடன், சில முடிவுகளையும் எட்டியது...
* பிரதிமாதம் 7-ம் தேதி சம்பளம் வழங்க கோரி மாநிலம் முழுவதும் ஒப்பந்த ஊழியர்கள்          கண்ணை கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது.
*  நமது  TNTCWU மாநில சங்கத்தால்  ஒப்பந்த ஊழியர்களின்  நிரந்தரத்திற்காக                                 தொடுக்கப்பட்டுள்ள வழக்கு  எதிர்வரும் ஏப்ரல்-15 முடிவிற்கு வர வாய்ப்பு இருக்கிறது.
*  நமது  TNTCWU மாநில சங்கத்தால்  ஒப்பந்த ஊழியர்களின்  நிலுவைக்காக                                 தொடுக்கப்பட்டுள்ள வழக்கு  எதிர்வரும் பிப்ரவரி -15 முடிவிற்கு வர வாய்ப்பு இருக்கிறது.
*  பிப்ரவரி - 7 அமைப்பு தினம் கொண்டாவது.
*  ஆண்டு சந்தாவை விரைந்து முடிப்பது, மாநில சங்கத்தால் ஒப்பந்தஊழியர்களுக்கு                விரைவில் அடையாள அட்டை வழங்கப்படும்.நமது மதுரை மாவட்டTNTCWU சங்கத்தால்     முதற்கட்டமாக ரூபாய் 10000 வழங்கப்பட்டுள்ளது.
*  மார்ச்-15 (2 வது வாரத்திற்குள் )  தொழிற்சங்க வகுப்பு நடத்தப்படும்.
*  ஒப்பந்த ஊழியர்களின்  சம்பளம் கடந்த 2008-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டு  5 ஆண்டுகள்          நிறைவடைந்து விட்ட படியால் புதிய சம்பள மாற்றத்திற்கு வலியுறித்தி  DLC-யிடம்                    கடிதம் கொடுப்பது.
*  BSNL பாதுகாப்பிற்கு 21 அம்ச கோரிக்கை வைத்து  BSNLஊழியர்களும், அதிகாரிகள்                   இணைந்து நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் ஒப்பந்த ஊழியர்களும் முழுமையாக             பங்குபெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. ...தோழமையுடன், எஸ். சூரியன்.

No comments: