மும்பை மாரத்தான் ஓட்டத்தில், இந்தியா சார்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஜெய்ஷா, லலிதா பாபர், சுதா சிங் ஆகியோர், பீஜிங்கில் நடக்கவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.மும்பையில், 12வது மும்பை மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் இந்தியா சார்பில் பெண்கள் பிரிவில் முதன்முறையாக பங்கேற்ற கேரளாவின் ஜெய்ஷா, பந்தய துாரத்தை 2 மணி நேரம், 37 நிமிடம், 29 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இதன்மூலம், கடந்த 1995ல் சென்னையில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் சத்யபாமா (2 மணி நேரம், 39 நிமிடம், 10 வினாடி) படைத்த தேசிய சாதனையை முறியடித்தார். தவிர இவர், வரும் ஆகஸ்ட் மாதம் சீனாவின் பீஜிங்கில் நடக்கவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இவர், ஆசிய விளையாட்டில் 1500 மீ., (2014, இன்ச்சான்), 5000 மீ., (2006, தோகா) ஓட்டத்தில் வெண்கலம் வென்றார்.அடுத்த இரண்டு இடங்களை லலிதா பாபர் (2 மணி நேரம், 38 நிமிடம், 21 வினாடி), சுதா சிங் (2 மணி நேரம், 42 நிமிடம், 11 வினாடி) கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய தடகள கூட்டமைப்பு (ஐ.ஏ.ஏ.எப்.,) நிர்ணயித்த இலக்கை (2 மணி நேரம், 44 நிமிடம்) அடைந்த இவர்கள் இவரும், பீஜிங்கில் நடக்கவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். --- மேலும் வெற்றிபெற நமது வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment