Saturday, 31 January 2015

30.01.2015 கடலூர் நகரமே BSNL கடல்மையமானது . . .

அருமைத் தோழர்களே ! கடல் சிறுத்ததோ என்று அனைவரும் பேசும் அளவிற்கு  கடலூரில் எங்கு நோக்கினும் BSNL ஊழியர்களும், ஆதிகாரி களும்  நிரம்பி வழிந்த காட்சியில்  30.01.2015 கடலூர்  நகரமே BSNL கடல் மையமானது  என்றால் அது மிகையாகாது . . . " SAVE BSNL" என்ற ஒரே உன்னத கோஷத்தோடு, தேசபக்த உனர்வோடு தமிழகம் முழுவதும்  உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து BSNL ஊழியர்களும், அதிகாரிகளும் சங்க பேதமின்றி கடலூர் சுப்புராயலு மண்டபத்தில் கூடிய காட்சி காண கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. மாநில அளவிலான சிறப்பு கருத்தரங்கை எந்த குறையும் இன்றி கடலூர் அனைத்து மாவட்ட சங்கங்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது என்பது மிக பாராட்டுக்குரிய விஷயம். இந்த ஏற்பாட்டு பணிகளில் ஈடுபட்ட அனைத்து தோழர்களையும் BSNLEU மதுரை மாவட்டசங்கம்மனதாரபாராட்டுகிறது.
பல ஆயிரம் பேர் கூடிய சிறப்பு கருத்தரங்கிற்கு BSNLEU மாநிலத் தலைவர் தோழர் எஸ். செல்லப்பா உள்ளிட்டு அனைத்து சங்க மாநில தலைவர்களும் கூட்டு தலைமை பொறுப்பேற்க, கடலூர் NFTE மாவட்ட செயலர் தோழர்.ஸ்ரீதர், வரவேற்புரை நிகழ்த்தினார்.BSNLEU மாநில செயலர் தோழர்.எ. பாபு ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து சங்க மாநில செயலர்களும் கருத்துரை வழங்கினர். 
அதன் பின் BSNLEU பொதுச் செயலர் தோழர்.பி. அபிமன்யு,  NFTE பொதுச் செயலர் தோழர்.சி .சந்தேஸ்வர் சிங் , SNEA பொதுச் செயலர் தோழர். கே.செபஸ்டியான், AIBSNLEA அகில இந்திய தலைவர் தோழர்.பி. வேணுகோபால்  ஆகிய அனைத்து அகிலஇந்திய தலைவர்களும், கருத்தரங்கத்தின் நோக்கம், மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கு, BSNL தலைமையக நிர்வாகத்தின் அக்கறையற்ற அலச்சிய போக்கு ஆகியவைகள் குறித்தும் நமது தொடர் முயற்ச்சி, இயக்கங்கள் குறித்தும், பொதுமக்கள் மத்தியில் நாம் கொண்டு செல்ல வேண்டிய கடமை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.
அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 9 லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டியதில்  முதற்கட்டமாக  கருத்தரங்கத்தில் 1,60,000 கையெழுத்து பெற்ற படிவங்களை அனைத்து மத்திய சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் எதிர்வரும் 25.02.2015 டெல்லி நோக்கிய பேரணியையும், 17.03.2015 முதல் இந்திய நாடு முழுவதும் மத்திய அரசிற்கு நமது உணர்வுகளை உணர்த்தும் முகத்தான் ஒன்றுபட்ட காலவரையற்ற வேலைநிறுத்த தயாரிப்புகளையும் சக்தியாக நடத்திட உறுதி பூணப்பட்டது. இறுதியாக BSNLEU கடலூர் மாவட்ட செயலர் தோழர்.K.T.சம்பந்தம் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.குறிப்பு: நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் சார்பாக மட்டும் கடலூரில் நடைபெற்ற 30.01.2015 சிறப்பு கருத்தரங்கத்தில் 67 பேர் கலந்து கொண்டனர்.-- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன், --D/S-BSNLEU.

No comments: