Wednesday, 14 January 2015

13.01.15 மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம் பத்திரிக்கையில். . .

அருமைத் தோழர்களே ! நமது சங்கம் நடத்திய 13.01.15 மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம் குறித்து சில மாவட்ட செய்திகள்  பத்திரிக்கையில் வெளிவந்துள்ளதை உங்களது பார்வைக்கு . . .
சிம்கார்டு தயாரிப்பு ஒப்பந்தத்தை தாமதம் செய்வதா?-தொலைத்தொடர்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்... 
சிம்கார்டு தயாரிப்புக் கான ஒப்பந்தம் விடுவதில், காலதாமதம் செய்யப் படுவதைக் கண்டித்து, தொலைத் தொடர்புத் துறை ஊழியர்கள் செவ் வாய்க்கிழமையன்று புதுக் கோட்டையில் ஆர்ப்பாட் டம் நடத்தினர்.செல்போன், இணைய தளம் போன்ற செயல் பாடுகளுக்கு பிஎ°என் எல் சார்பில் சிம்கார்டு கள் விற்பனை செய்யப்படு கின்றன. இந்நிலையில் தொலைத் தொடர்பு வட்டங்களின் தேவைக் கேற்ப- கடந்த ஒரு மாதத் திற்கும் மேலாக சிம்கார் டுகள் ஒதுக்கீடு செய்யப் படவில்லை. இதனால், சுமார் 80 ஆயிரம் வாடிக்கை யாளர்களுக்கு சிம்கார்டு களை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது பிஎ°என்எல் நிறுவனத் தை முடக்கும் செயல்பாடு களில் ஒன்றாகப் பார்க்கப் படுகிறது.எனவே, இதைக் கண்டித்து, புதுக்கோட்டை தொலைத்தொடர்பு அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் கிளைத் தலைவர் கே.நடராஜன் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செய லாளர் எம்.மல்லிகா, ஒப்பந்த ஊழியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் ஆர்.கல்லடியான், கிளைச் செயலாளர் எம்.பால சுமாரன் உள்ளிட்டோர் பேசினர்
மத்திய அரசைக் கண்டித்து நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்... 
தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சிம் கார்டுகள் தட்டுபாட்டைக் கண்டித்து BSNL ஊழியர்கள் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சிம் கார்டுகள் தட்டுப்பாடு தமிழகம் முழுவதும் காணப்படுவதால் வாடிக்கை யாளர்களுக்கு சிரமம் ஏற் பட்டுள்ளது. தற்போது சுமார் 8 லட்சம் சிம்கார்டுகள் தேவைப்படும் நிலையில் ஒரு லட்சம் கார்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மத்திய- மாநில அரசு நிர்வாகங்களிடம் BSNL ஊழியர் சங்கத்தின்மத்திய, மாநில நிர்வாகிகள்வலியுறுத்திய பிறகும் தேவையான சிம் கார்டு கள் வழங்கப்படவில்லை.இந்நிலையில் சிம் கார்டுகள் வழங்கப் படாததைக் கண்டித்தும், நிர்வாகம் உடனடியாக சிம்கார்டுகள் வழங்கக்கோரி யும்BSNL நிறுவ னத்தை நலிவடையச் செய்து தனியார் நிறுவனங்களுக்கு உதவும்நோக்கத்துடன் செயல் படும் மத்திய அரசைக் கண்டித்தும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் நாகர்கோவில் BSNL பவன் முன்புஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் கே.கங்காதரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.ஜார்ஜ்பேசினார். மாவட்டப் பொருளாளர் பா.ராஜூஉட்பட திரளான ஊழியர் கள் கலந்து கொண்டனர்
பிஎஸ்என்எல் சிம்கார்டு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். . .  
மதுரை, ஜன.13-தமிழகம் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கும், சந்தாதாரர்களுக்கும் உடனடியாக சிம்கார்டு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்,ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பொதுத்துறையான பிஎஸ்என்எல்லில் தமிழ்நாடு கேரளம், மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கும், சந்தாதாரர்களுக்கும் கடந்த ஒரு மாத காலமாக சிம்கார்டு வினியோகம் நடைபெறவில்லை. இதுவரை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் நான்கு முறை கடிதம் எழுதியும் இதுவரை நிர்வாகம் சிம்கார்டுகளை வழங்கவில்லை. இதனைக் கண்டித்தும், பொங்கல் பண்டிகைக்கு முன்பணம் வழங்காததைக் கண்டித்தும், ஜிபிஎப்உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை பீபீகுளத்தில் உள்ள பொதுமேலாளர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் சி.செல்வின் சத்தியராஜ், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கமாவட்டத்தலைவர் கே.வீரபத்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் அன்பழகன், மாவட்டச் செயலாளர் என்.சோனைமுத்து ஆகியோர் பேசினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சூரியன் நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் எஸ்.மாயாண்டி நன்றி கூறினார். மதுரை தொலைத் தொடர்பு மாவட்டத்தில் இக்கோரிக்கைகளை வலி யுறுத்தி திண்டுக்கல்,பழனி, தேனி, கம்பம் ஆகிய பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

No comments: