Tuesday 13 January 2015

13.01.2015 ஆர்பரித்து நடந்த ஆர்ப்பாட்டம் . . .

 அருமைத் தோழர்களே ! நமது BSNL நிறுவனத்தை மறைமுகமாக அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு மேலமைப்பில் உள்ளவர்கள் செய்யும் சதி திட்டமா ? என்ற நியாமான சந்தேகம் எழக்கூடிய வகையில் நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன என்றால் அது மிகையாகாது. நமது BSNL நிறுவனத்தில் "SIM" இல்லை என்ற நிலை தற்செயலாக நடந்ததாக கருத முடியவில்லை, மாறாக இந்நிலையை செயற்கையாக உருவாக்கப் பட்டதாக தோன்றுகின்றது. நமது  மத்திய, மாநில தொடர் முயற்சிக்கு பின் தமிழகம் தழுவிய இந்த  13.01.2015  ஆர்ப்பாட்டத்தை நடத்திட நமது மாநில சங்கம் அறைகூவல் விடுத்திருந்தது. அதனடிப்படையில்  நமது மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், குறிப்பாக திண்டுக்கலில் காலை 10 மணிக்கு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு தோழர். ஞானசுந்தரம் தலைமை தாங்கினார். தோழர்கள்,ஜே. ஜோதிநாதன், எ. குருசாமி, எஸ். ஜான் போர்ஜியா ஆகியோர் கோரிக்கையை விளக்கினர்.
13.01.2015 மதியம் 1 மணிக்கு  மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு தோழர்கள், சி. செல்வின் சத்தியராஜ், தோழர்.கே. வீரபத்திரன் கூட்டுத்தலைமை பொறுப்பெற்றனர்.  
நமது BSNL நிறுவனத்தில் "SIM" இல்லாத நிலைமை 
* ஊழியர்கள்  காலம் காலமாக பெற்றுவந்த GPF / F.A கிடைக்காத நிலை 
*  ஒப்பந்த ஊழியர்கள் பணிசெய்த காலத்திற்கு சம்பளம் இல்லை
*  சேல்ஸ்/மார்கெட்டிங் பகுதியில் பனி புரிவர்களுக்கு அலவன்ஸ் கிடைக்கவில்லை 
எனவே, மாநில சங்க அறைகூவலுக்கு இணங்க நாம் நடத்திய ஆர்பாட்டத்தில் மிக எழுச்சியுடன் அதிகமான பெண்களும், ஆண்களுமாக திரளாக கலந்து கொண்டது மிக சிறப்பம்சமாகும்.
ஆர்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி தோழர்கள்.அன்பழகன், என். சோனைமுத்து, எஸ். சூரியன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இறுதியாக தோழர்.எஸ். மாயாண்டி நன்றி கூற ஆர்ப்பாட்டம் இனிதே நிறை வேறியது. 

No comments: