Friday 9 January 2015

குழுஅமைப்பு- நிலக்கரி தொழிலாளர்களுக்கு CITU பாராட்டு...

நிலக்கரி சுரங்கங்களை தனியார்மய மாக்கும் அவசரச் சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய நிலக்கரி சுரங்க தொழி லாளர்களின் வேலை நிறுத்தம் வெற்றிபெற்றதற்க்கு சிஐடியு வாழ்த்து தெரிவித்துள்ளது.நிலக்கரி சுரங்கங்களை தனியார் மயமாக்கும் அவசரச்சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இதை எதிர்த்து சிஐடியு, ஏஐடியுசி, பிஎம்எஸ், ஐஎன்டியுசி, எச்எம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்துள்ள அனைத் திந்திய நிலக்கரி தொழிலாளர் சம்மேளனம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை ஜனவரி 6ம் தேதியிலிருநது 10ம் தேதி வரை நடத்துவதாக அறிவித் திருந்தது.வேலை நிறுத்தம் தொடங்கி இரண்டு நாட்களிலேயே நாடு முழு வதும் அனல் மின் நிலையங்கள் உள் ளிட்ட எண்ணற்ற நிலக்கரியைச் சார்ந் துள்ள தொழில் நிலையங்கள் முடங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பின்னர் நிலக்கரி அமைச்சர் அளித்த உறுதி மொழியினை அடிப்படையாகக் கொண்டு வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.இதுதொடர்பாக தில்லியில் சிஐடியு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யுள்ளதாவது:-நாடு முழுவதும் உள்ள நிலக்கரி தொழிலாளர்கள் வெற்றிகரமாக வேலைநிறுத்தம் நடத்தியதற்கு சிஐடியு வாழ்த் துக்களை தெரிவித்துக் கொள்கிறது.இருப்பினும் இந்த வேலைநிறுத்தம் மிகப்பெரிய அளவில் அற்புதமான முறை யிலும் நிலக்கரி தொழிலாளர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தியது. இந்நிலையில் கோரிக்கைகளை பரி சீலிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றுகூறிய நிலக்கரி அமைச்சரின் உறுதி மொழியை அடிப்படையாகக் கொண்டு வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது துரதிருஷ்டவசமானது.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது சிஐடியு பிரதிநிதி அவசரச் சட்டத்திலிருந்து தனியார்மயமாக்கும் பிரிவை நீக்கக்கோரி போராடினார். இந்த இரண்டு நாள் முழுமையான வேலைநிறுத்தத்தில் அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்டு 7 லட்சம் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். நிலக்கரித்துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்துபோராடுவதில் நிலக்கரி தொழிலாளர் களின் ஒற்றுமையையும் அவர்களின் தீர்மானகரமான முடிவையும் இது காட்டுகிறது.இந்த ஒற்றுமையும் ஒருங்கிணைந்த போராட்டங்களும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.சிஐடியு இந்த ஒற்றுமையை ஆழப்படுத்தவும் பரந்துபட்ட அளவில் விரிவுபடுத்தவும் முயற்சிகள் எடுப்பதற்கு உறுதி எடுக்கிறது. இதுதொடர்ந்து, தொழிலாளர்கள் மற்றும் நாட்டு மக்களின் நலன்களைக் காக்க போராட்டங்கள் தீவிரமாகத் தொடரும். நமது BSNLEU சங்கமும் பாராட்டுகிறது.