Wednesday 14 January 2015

கச்சா பேரல் 45 டாலருக்கு கீழ் பெட்ரோல்,டீசல் விலை ?

கச்சா எண்ணெய் விலை பேரல் 45 டாலருக்கு கீழ் வீழ்ந்தது. இதனால் இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை குறையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரல் 50 டாலருக்கு விற்ற கச்சா எண்ணெய் செவ்வாய்க்கிழமை பேரல் 45 டாலருக்கு கீழ் குறைந்தது. இந்த விலை வீழ்ச்சியால் ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு செவ்வாய்க்கிழமை 2சதவிகிதம் குறைந்தது.இதற்கிடையில் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் சுகெல் முகமது பாரிக் அலிமசுராய் அபுதாபி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த ஒபெக் அமைப்பு தவறி விட்டது ஒபெக்கின் நோக்கம் இதுவல்ல. எண்ணெய் விலை வீழ்ச்சி எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. அதற்கு நாங்கள் மட்டும் காரணம் அல்ல. விலை வீழ்ச்சியை தடுக்க கச்சா எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 114.25 டாலராக இருந்த போது, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 75 க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 45 டாலர் என்ற அளவிற்கு குறைந்திருக்கிறது. இதனால் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.40 வரை குறைய வேண்டும். ஆனால் இந்த விலை குறைவை பயன்படுத்தி தொடர்ந்து மோடி தலைமையிலான பாஜக அரசு கலால் வரியை உயர்த்தி, விலை குறைப்பின் பயனை மக்களிடம் இருந்து அரசு தட்டி பறித்து வருகிறது. இந்த முறையாவது பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

No comments: