Tuesday 20 January 2015

20.01.2015 நடந்தவை - த.மு.எ.க.ச -கண்டன ஆர்ப்பாட்டம்...

அருமைத் தோழர்களே! பெருமாள் முருகன் கருத்து, எழுத்து சுதந்திரத்திற்கு எதிராக மத்திய,மாநில அரசுகள் கடைபிடிக்கும் நிலைபாட்டை கண்டித்து 20.01.2015 திங்கள் மாலை மதுரை குட்செட் தெருவில் - த.மு.எ.க.ச மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பாகவும்  -கண்டன ஆர்ப்பாட்டம், த.மு.எ.க.ச  தமிழ் மாநில துணைத்தலைவர் தோழர் எஸ்.எ. பெருமாள் அவர்கள் தலைமையில் மிக, மிக சீரும் சிறப்பாக நடைபெற்றது....
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்டச் செயலர் தோழர். ஆனந்தகுமார் கண்டன ஆர்பட்டக்கூட்டத்திற்கு முன்னிலை வகுத்தார்.தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநில துணைத்தலைவர் தோழர்.என். நன்மாறன், மாவட்டத்தலைவர் தோழர், பா. கவிதாகுமார், ஸ்டாலின், மு.செல்லா, பாண்டுரெங்கன், பி . வரதராஜன்,  ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.நமது BSNLEUசங்கத்திலிருந்து தோழர்கள்,சௌந்தர், சத்தியராஜ், சூரியன் ஆகியோர் பங்கேற்றனர்.
சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.தமிழ்செல்வன், தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள எழுத்து மற்றும் பேச்சுரிமைகளுக்கு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அண்மை காலங்களில் தமிழகத்தில் நடந்து வருகிறது. நாமக்கலில் உள்ள கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணி செய்து வரும் பெருமாள்முருகன், கடந்த 2010–ம் ஆண்டுமாதொருபாகன்என்ற நாவல் எழுதினார். அந்த நாவலில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீசுவரர் கோவில் திருவிழாவில் நடைபெறும் சம்பவம் குறித்து எழுதியிருந்தார்.இந்த நிலையில், சாதி மற்றும் மதம் அடைப்படையிலான அமைப்புகள், 4 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீசில் அனுமதி பெறாமல் போராட்டங்களை நடத்தினார்கள். நாவலில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் உள்நோக்கம் இல்லை என்றும் திருச்செங்கோடு என்ற ஊரின் பெயரை அகற்றி விடுவதாகவும், ஆசிரியர் பெருமாள் முருகன் உத்தரவாதம் அளித்தும், போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். கடைகளை அடைத்து, மாவட்டம் முழுவதும்பந்த்நடத்தினார்கள்.இந்த போராட்டக்காரர்கள் மீது மாவட்ட காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கடந்த 12–ந்தேதி நடந்த சமரச கூட்டத்தில், பெருமாள் முருகன் தனியாக சென்றால், அவருக்கு ஏராளமான மிரட்டல்கள் விடப்பட்டது. இதையடுத்து, பெருமாள்முருகன், மாதொருபாகன் புத்தகத்தையே திரும்ப பெறுவதாக எழுதிக் கொடுத்துள்ளார். அதிகாரிகள், போராட்டக்காரர்கள் ஆகியோரது நிர்பந்தத்தால், அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார். எனவே, இந்த சமரச கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை ரத்து செய்ய வேண்டும். அந்த சமரசக் கூட்டமே செல்லாது என்று அறிவிக்க வேண்டும். பெருமாள் முருகனுக்குபோலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் .எல்.சோமயாஜி, மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.செந்தில்நாதன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். அப்போது நடந்த வாதம் விவரம்:–நீதிபதிகள்:– இந்த வழக்கில் முக்கிய நபரான பெருமாள் முருகனை ஏன் இந்த வழக்கில் ஒரு மனுதாரராக சேர்க்கவில்லை. அவரது கருத்தினை கேட்காமல் எப்படி இந்த கோர்ட்டினால் முடிவு எடுக்க முடியும்?செந்தில்நாதன்:– அவர் தனக்கு ஏற்பட்டுள்ள நிர்பந்தங்களின் விவரங்களை, தன்னுடைய முகநூலில் வேதனையுடன் எழுதியுள்ளார். பெருமாள்முருகன் இறந்து விட்டான். அவன் மீண்டும் பிறக்க மாட்டான் என்று குறிப்பிட்டுள்ளார்.சோமாஜி:– பெருமாள் முருகனே, சமரச பேச்சு வார்த்தை கூட்டத்தில் கலந்துக் கொண்டு கடிதம் கொடுத்துள்ளார். அது முடிந்துபோன பிரச்சினை. மாதொருபாகன் புத்தகத்தில், குறிப்பிட்ட சில பக்கங்களை மட்டும் அகற்ற அவர் சம்மதித்துள்ளார். அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், ஒட்டுமொத்த திருச்செங்கோடு பகுதி மக்களுக்கு மனவேதனை தந்துள்ளது. கருத்துச் சுதந்திரம் உள்ளது என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதி விட முடியாது.நீதிபதிகள்:– கருத்து சுதந்திரமும், நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டதுதான். இந்த புத்தகம் எப்போது எழுதப்பட்டது? 4 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டுள்ள புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கு இப்போது ஏன் பிரச்சினை எழுந்துள்ளது?சோமயாஜி:– பொதுமக்கள் அந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை இப்போது தான் படித்துள்ளனர்.

நீதிபதிகள்:– ஒருவேளை பொதுமக்களுக்கு மன வேதனை ஏற்பட்டிருந்தால், அவர்கள் சட்டப்படியான நிவாரணத்தை பெற முயற்சிக்க வேண்டும். அதற்காக போராட்டம், பந்த் என்று நடத்துவதை ஏற்றுக் கொண்டால், எதிர்காலத்தில் ஒவ்வொரு பிரச்சினைக்கும் இதுபோல் போராடத் தொடங்கி விடுவார்கள். அப்போது சட்டத்தின் ஆட்சி என்பது கேள்விக் குறியாகி விடும். மேலும், நீதித்துறை அதிகாரத்தை சட்டப்படி அனுமதி பெறாதவர்கள் கையில் எடுப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. அதிகாரிகள் சமரசக் கூட்டத்தை கூட்டி, நீதித்துறையின் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளனர். ஒரு எழுத்தாளர் என்ன எழுத வேண்டும் என்பதை சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் முடிவு செய்வதை ஏற்க முடியாது. இந்த வழக்கில், பெருமாள் முருகனை எதிர் மனுதாரராக, மனுதாரர் சேர்க்க வேண்டும். பெருமாள் முருகன் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும், பதிலளிக்கும்படி நோட்டீசு அனுப்புகின்றோம். இந்த வழக்கு நாளை மறுநாள் (வியாழக்கிழமைக்கு) தள்ளி வைக்கின்றோம்.இவ்வாறு வாதம் நடந்தது.

No comments: