ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்க அரசு ஒப்புதல்,
ஒன்றுபட்ட போராட்டம் வெற்றி பஸ் வேலைநிறுத்தம் வாபஸ்...
அரசு போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அரசு ஒப்புக் கொண்டதை தொடர்ந்து வேலைநிறுத்தம் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கும் அ.சவுந்தரராசன், மு.சண்முகம் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள்15 மாதகாலமாக
பேசப் படாமல் இருக்கும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சிஐடியு, தொமுச உள்ளிட்ட 11 போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட் டத்தின் பலனாக ஊதிய ஒப்பந்தம் நடத்த குழு அமைக்கப்படும் என அமைச்சர் ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் வேலைநிறுத்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் ஊதியஉயர்வு கோரிக்கையின் மீது பேச்சு வார்த்தை கடந்த 1.9.2013 முதல் நடத்தாமல் காலம் கடத்தப்பட்டு வந்தது.
இந்த சூழலில் டிச. 29 முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என தொழிற் சங்கங்கள் அறிவித்தன.இதற்காக கடந்த சில மாதங் களாக தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இதன் எதிரொலியாக, அரசும் போக்கு வரத்து நிர்வாகமும் மோசமானஅணுகுமுறைகளை கையாண்டது.தொழிலாளர்களின் ஒற்று மையை சீர்குலைக்கவும் போராட்டத்தை ஒடுக்கவும் காவல் துறையின் உதவியோடு அரசும் போக்குவரத்து நிர்வாகமும் கைது நடவடிக்கையை துவக்கியது.இதனால் ஆவேசமடைந்த தொழி லாளர்கள் வேறுவழியின்றி ஒரு நாள் முன்கூட்டியே டிசம் பர் 28ம் தேதியே வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கினர். இதனால் மாநிலம் முழுவதும் போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. இதனையடுத்து, ஆளுங் கட்சியை சேர்ந்த ரவுடிகள் அனு பவம் இல்லாத ஓட்டுநர்கள் கொண்டு வாகனங்களை இயக்க மாநில அரசும் போக்குவரத்து நிர்வாகமும் முயற்சிகளை மேற் கொண்டது.ஆனாலும் பலன் அளிக்கவில்லை. இரண்டாவது நாளில் ஆளும் கட்சியை சேர்ந்த சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை முன் வைத்தனர். இதற்கிடையில், முதலமைச்சர் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து தொமுச நிர்வாகிகள் கடிதம் கொடுத்தனர். பின்னர், அரசு தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்தது.புதனன்று காலை 10.35 க்கு தலைமை செயலாகத்திற்கு வந்த தொழிற் சங்கத் தலைவர்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ, நிர்வாகிகள் ஆறுமுகநயினார், எம்.சந்திரன்(சிஐடியு), மு.சண் முகம், நடராஜன் (தொமுச), சுப்பிரமணிபிள்ளை (எச்எம்எஸ்), லட்சு மணன்(ஏஐடியுசி), விஷ்ணு பிரசாத்(ஐஎன்டியுசி), சவுந்திர பாண்டியன்(டிஎம்பிஎஸ்பி), மீனாட்சிசுந்தரம்(பிஎம்எஸ்), அர்ஜூணன்(ஏஏஎல்எல்எப்), சின்னசாமி எம்எல்ஏ, தாடிமாராஜ் (ஏடிபி), பத்மநாபன்(டிடிஎஸ்எப்), முத்துகுமார் (பிடிஎஸ்) ஆகியோர் பேச்சு வார்த்தையில் பங்கேற்றனர்.பின்னர் தலைமை செயலக வளாகத்தில் தொழிற்சங்கத் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அ. சவுந்தரராசன் கூறுகையில், 11 தொழிற்சங்கங்கள் முன் வைத்த கோரிக்கைகளில் பிரதானமானது ஊதியஉயர்வு ஒப்பந்தம் குறித்துஅனைத்து தொழிற்சங்கங் களையும் அழைத்து பேச வேண்டும் என்பதாகும். அரசு தரப் பில் அனைத்து தொழிற் சங்கங்களையும் அழைத்து பேச ஆட் சேபனை இல்லை என தொமுச கடிதம் ககொடுத்தால்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஒப்புக் கொண்ட தொமுச கடிதம் கொடுத்தது. இதன் அடிப்படையில் அமைச்சரை சந்தித் தோம். இதில் உடன்பாடு ஏற்பட் டது. எனவே, 11 சங்கமும் கூட்டாக வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெற்றுக் கொண்டோம். அமைச்சரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு முத்தரப்பு குழு அமைக்கப்படும் என அறிவித்தது மகிழ்ச்சி
அளிக்கிறது என்றார்.இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இன்னும் இரண்டு நாட்களில் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்குழு என்று ஒரு குழு அமைக்கப்படும். அரசு அமைக்கும் குழுவில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பதை அரசே முடிவு செய்யும். எங்கள் தரப்பில் தொமுச தலைவர் சண்முகம் உட்பட 11 சங்கங்களின் தலைவர்கள் அந்த குழுவில் இடம் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.வேலை நிறுத்தத்தின்போது கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்றும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் ஓரிரு நாட்களில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு அதன்பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்றும் சவுந்தரராசன் தெரிவித்தார்.தொமுச தலைவர் சண்முகம் கூறுகையில், அமைச்சர் முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடுஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் மீதுபோடப்பட்டுள்ள வழக்குகள் விலக்கிக்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளார் என்றார். தோழர்களே "வஞ்சனைக்கும் அஞ்சிடோம், வெஞ்சிறைக்கும் அஞ்சிடோம்,நெஞ்சினைபிளந்த போதும் நீதி கேட்க அஞ்சிடோம்" என அரசு அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டபோதும் மனம் தளராமல் போராடி வெற்றி பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் வாழ்த்துகளை உரித்தாக்குகிறது.
No comments:
Post a Comment