Wednesday, 24 June 2015

ஜூன்-24, கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்...

(ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப்   பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 4000-கும் மேற்பட்ட கவிதைகள், 5000-கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள்கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்சாகித்ய அகாதமி விருது பெற்றவர். உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24-ல் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20 இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு,  மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அக்டோபர் 22 இல் எரியூட்டப்பட்டது.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

மகாகவிஞரின் நினைவினைப் போற்றுவோம்